Tamilnadu Roundup: அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் ரெய்டு.. சேலம் செல்லும் முதலமைச்சர் - தமிழகத்தில் இதுவரை
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

அமைச்சர் ஐ பெரியசாமிக்கு சொந்தமான வீடு, அலுவலங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
சென்னை, திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ பெரியசாமிக்கு சொந்தமாக உள்ள வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனையால் பரபரப்பு
பழனி எம்.எல்.ஏ.வும், அமைச்சர் ஐ பெரியசாமி மகன் செந்தில்குமார் வீ்ட்டிலும் அமலாக்கத்துறை சோதனை
சென்னையில் காலமான நாகலாந்து ஆளுநர் இல.கணேசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டத்திற்கு பயணம்; கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் பங்கேற்று உரை
திமுக-வினருக்கு அனைத்திலும் கமிஷன் கிடைப்பதால் விலைவாசி பற்றி கவலையில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திருத்தணியில் தங்கும் விடுதியில் திடீரென தீ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
திண்டுக்கல்லில் பெண்களை குறிவைத்து நகைகள் பறிப்பு; ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கேரள சைக்கோ கொள்ளையன் கைது
அண்ணாசாலையில் மேம்பாலம் கட்டுவதால் சென்னையில் நாளை முதல் போக்குவரத்து பணிகள் மாற்றம்
தமிழ்நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம் - ஆடிக்கிருத்திகை என்பதால் முருகர் கோயில்களில் காலை முதல் குவிந்த பக்தர்கள்





















