மேலும் அறிய
Advertisement
Tamilnadu Round Up: கோவை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் சொன்ன குற்றச்சாட்டு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என மாவட்ட வாரியாக கள ஆய்வு மேள்கொள்ள உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முதற்கட்டமாக கோவை செல்கிறார்.
- இந்தியாவின் சக்தி வாய்ந்த டாப் 10 அரசியல் கட்சி தலைவர்கள் பட்டியல் - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 8வது இடம்
- அரசியலுக்காக மக்களைப் பிளவுபடுத்தப்படுவதாக, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
- தமிழகம் முழுவதும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை மையம் எச்சரிக்கை
- ஈரோடு மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் கோபிசெட்டிபாளையம் அருகே பவானி ஆற்றில் அமைந்துள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
- சென்னை திருவொற்றியூரில் 2வது முறையாக வாயு கசிவு ஏற்பட்டு 6 மாணவிகள் மயக்கமடைந்த தனியார் பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை
- விக்கிரவாண்டி அருகே விடூர் பகுதியில் நெல் மூட்டை ஏற்றிச் சென்ற லாரி மீது பின்னால் வந்த சுற்றுலா வேன் மோதிய விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்
- ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் அடிவார ஆற்றில் வெள்ளப்பெருகில் சிக்கிய இருவர்... வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரின் நீண்ட முயற்சிக்கு பிறகு பத்திரமாக மீட்பு
- முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரிய தமிழ்நாடு அரசு - முதற்கட்டமாக 1000 மருந்தகங்களை அமைக்க திட்டம்
- 2026-ல் திமுகவின் குடும்ப ஆட்சியைத் துடைத்தெறிந்துவிட்டு, ஜனநாயக ஆட்சியை விஜய் அமைப்பார் - தவெக
- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போரட்டம் நடத்த உள்ளதாக மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அறிவிப்பு
- தெலுங்கு இன மக்களை அவதூறாக பேசியதாக, நடிகை கஸ்தூரி மீது தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார்
- பிராமணர்களுக்கு படிக்க வாய்ப்பில்லை, அரசு வேலைவாய்ப்பில்லை, வைதீகம் செய்யலாமென்றால் சம்பளமும் இல்லை தட்டில் காசுப்போடுவதுமில்லை - நடிகை கஸ்தூரி
- திண்டுக்கல் மாவட்டத்தில் 170 அரசுப் பள்ளிகளில் 93 பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை - ஆர்டிஐ-ல் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
- நெல்லையில் 17 வயது சிறுவனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய கும்பல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion