மேலும் அறிய
Advertisement
Tamilnadu Round Up: நாளை கோவை புறப்படும் முதல்வர்! 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- சென்னை கொளத்தூரில் ரூபாய் 2.8 கோடி மதிப்பில் முதல்வர் படைப்பகம் – இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாட்டில் இன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
- தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் அதிகபட்ச மைழ பதிவு
- கேரளாவில் ரயில் மோதி உயிரிழந்த சேலத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு – உடல்களை அடக்கம் செய்ய ஏற்பாடு
- சுமார் 2 ஆயிரத்து 500 பேருந்துகளில் சென்னைக்கு இதுவரை 79 ஆயிரம் பேர் அரசு பேருந்துகளில் திரும்பியுள்ளனர்.
- தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்; ஆம்னி பேருந்துகளைப் போல கட்டணத்தை உயர்த்திய உள்ளூர் விமானங்கள்
- தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னைக்கு திரும்புவதால் சென்னைக்கு உள்ளே வரும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- மாவட்ட வாரியாக ஆய்வுப்பணி; கோவையில் நாளை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவைக்கு செல்ல உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- சசிகலா, தினகரன், ஓபிஎஸ் மீது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடும் விமர்சனம்
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 11, 508 கன அடியாக அதிகரிப்பு – காவிரி நீர்ப்பிடிப்பில் மேலும் மழை அதிகரிக்க வாய்ப்பு
- கனமழை காரணமாக குன்னூர் வட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – நீலகிரி ஆட்சியர்
- தொடர் மழை, மண் சரிவு; உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் நாளை வரை ரத்து
- சிதம்பரம் நடராஜர் பெருமாள் கோயிலில் உள்ள கொடி மரத்தை மாற்ற தீட்சிதர்கள் எதிர்ப்பு
- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடரும் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் கடிதம்
- ஈரோட்டில் பச்சிளங்குழந்தையை விற்பனை செய்த 5 பேர் கைது
- வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதால் அடுத்து வரும் நாட்களில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தது தமிழக அரசு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion