மேலும் அறிய
Tamilnadu Roundup: தங்கம் விலை குறைவு, ரூ.3.5 கோடி போதைப்பொருள்-நைஜீரியர் கைது, வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி, பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மரியாதை.
- மருது பாண்டியர்களின் 224-வது குருபூஜை விழாவை ஒட்டி, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது சிலைக்கு மாலை அணிவித்தும், கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
- மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
- மதுரை அரசினர் விருந்தினர் மாளிகையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து உரையாடினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
- ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை எட்வினா ஜேசனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
- தென்காசியில் 1,020 கோடி ரூபாயில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்துள்ளது. ஒரு கிராமிற்கு ரூ.225 குறைந்து, கிராம் ரூ.11,100-க்கும், ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனை.
- திருவள்ளூர் அருகே, ரூ.3.5 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல். பைக்கில் எடுததுச் சென்ற நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞர் கைது.
- கோவை மாவட்டம் வால்பாறைக்கு செல்ல, வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என ஆட்சியர் அறிவிப்பு. போக்குவரத்து நெரிசலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை.
- வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதால் கோடியக்கரை சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement





















