மேலும் அறிய
Tamilnadu Roundup: ராமநாதபுரம் செல்லும் முதல்வர், தமிழ்நாட்டிற்கு ரூ.4,144 கோடி விடுவிப்பு, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- 2 நட்கள் பயணமாக இன்று மாலை ராமநாதபுரம் செல்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பேருந்து நிலையம், அறிவுசார் மையம், சமூக நீதி மையம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்கிறார்.
- விஜயதசமியை ஒட்டி குழந்தைகளுக்கு இன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி. இசை, நடனம், மொழிகள், நாட்டுப்புறக் கலைகளை கற்கும் நிகழ்வுகளும் இன்று தொடக்கம்.
- பண்டிகை காலம் வருவதையொட்டி மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரிப்பகிர்வை விடுவித்த மத்திய அரசு. தமிழ்நாட்டிற்கு 4,144 கோடி ரூபாய் விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு.
- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு. சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரிக்கை.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது. ஒரு கிராம் ரூ.10,880-க்கும், ஒரு சவரன் ரூ.87,040-க்கும் விற்பனை.
- சென்னையிலிருந்து மூணாறுக்கு சுற்றலா சென்ற கார் விபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் உயிரிழப்பு. இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
- எண்ணூர், நாகை, கடலூர், புதுச்சேரி, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை.
- திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் விமர்சையாக நடக்க உள்ள தசரா விழாவில், சூரசம்ஹார நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். காளி, அம்மன் வேடமிட்டு தீச்சட்டி ஏந்தி வழிபாடு.
- வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற ஈச்சர் வாகனம் மலைப்பாதை தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
கிரிக்கெட்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement





















