மேலும் அறிய
முக்கிய அறிவிப்பு.. வரும் சனிக்கிழமை (27.08.2022) இந்த மாவட்டங்களில் மட்டும் பள்ளிகள் செயல்படும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்காக, வரும் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என நான்கு மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்காக, வரும் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கடந்த மாதம் அதாவது ஜூலை 28-ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடு செய்யும் விதமாக வரும் சனிக்கிழமை அதாவது, ஆகஸ்ட் மாதம், 27-ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement