மேலும் அறிய

Ration shops: பொங்கல் பரிசை வாங்கவில்லையா? முந்துங்கள்.. ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பொங்கல் தினத்தன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கடைகளுக்கு விடுமுறை:

பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1,000த்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாநிலம் முழுவதும் வழங்கப்படுகிறது. இதற்காக பயனாளர்களுக்காக டோக்கன் வழங்கப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு முன்னதாக அனைத்து பயனாளர்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கும் நோக்கில், ஞாயிற்றுக்கிழமையான நாளையும் ரேஷன் கடைகள் செயல்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் நோக்கில் ஜனவரி 27ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 16ம் தேதி  ரேஷன் கடைகளுக்கு  விடுமுறை அளித்து உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக 27ம் தேதி அறிவிக்கப்பட்ட  விடுமுறையானது 16ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவுறுத்தல்:

பொங்கல் தொகுப்பில் ஏற்கனவே இருப்பில் உள்ள பச்சரிசியை விநியோக்க கூடாது என்றும், இரண்டு ரூ.500 தாள்கள் மட்டுமே வழங்க வேண்டும், சில்லறை மாற்றி தரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரேஷன் கடைகளை வழங்கப்படும் அரசின் தரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு:

2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 4ம் தேதி முதல் 8ம் தேதி வரையில் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து, பயனாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை, சென்னையில் கடந்த 9ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் தற்போது பொங்கல் பரிசு விநியோகிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1,000 பணத்துடன் கூடிய  ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. 

பரிசுதொகுப்பை மாற்றிய திமுக அரசு:

கடந்த அதிமுக ஆட்சியில் மக்களை கவரும் வண்ணம் அதிகப்பட்சமாக ரூ.2,500 பணத்துடன் கூடிய கரும்பு,பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. திமுக அரசு பொறுப்பேற்றதும் கடந்தாண்டுபணம் எதுவும் வழங்கப்படாமல் முழு கரும்போடு சேர்த்து பச்சரிசி, வெல்லம், உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

இது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்திய நிலையில், பொருட்களும் தரமில்லாமல் வழங்கப்படதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பொங்கல் சிறப்பு தொகுப்பை விநியோகித்த சில நிறுவனங்களை கருப்பு பட்டியலுக்குள் கொண்டுவர தமிழக அரசு உத்தரவிட்டது.  இதையடுத்து தான் நடப்பாண்டு பொங்கலை கொண்டாட சூப்பரான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TN Assembly: ரூ.58 லட்சம் பேலன்ஸ்.. சேகர்பாபுவால் சிக்கிய அமைச்சர் ரமேஷ்.. நடந்தது என்ன?
TN Assembly: ரூ.58 லட்சம் பேலன்ஸ்.. சேகர்பாபுவால் சிக்கிய அமைச்சர் ரமேஷ்.. நடந்தது என்ன?
Karunanidhi: ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டாரா கருணாநிதி.? உண்மையான காரணம் என்ன.? பிளாஷ் பேக் இதோ..
ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டாரா கருணாநிதி.? உண்மையான காரணம் என்ன.? பிளாஷ் பேக் இதோ..
தமிழகத்தில் 3 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்? - சென்னை வானிலை அறிக்கை
தமிழகத்தில் 3 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்? - சென்னை வானிலை அறிக்கை
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Karunanidhi: ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டாரா கருணாநிதி.? உண்மையான காரணம் என்ன.? பிளாஷ் பேக் இதோ..
ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டாரா கருணாநிதி.? உண்மையான காரணம் என்ன.? பிளாஷ் பேக் இதோ..
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
Embed widget