MK Stalin: ”அதிமுக ஆட்சியில் ஒப்பந்தங்கள் காகித கப்பல்கள்..”-துபாயிலிருந்து திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
துபாயில் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.
தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியேற்ற பிறகு நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் செய்தார். இதற்காக கடந்த 24ஆம் தேதி அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் துபாய் சென்றார். அங்கு நடைபெற்ற துபாய் எக்ஸ்போவில் பங்கேற்றார். அதன்பின்னர் அமைச்சர்களுடன் சந்திப்பு நடத்தினார். அதன்பின்னர் இரண்டு நாட்களுக்கு முன்பாக அபுதாபி சென்று அங்கு அமைச்சர்களை சந்தித்தார். இறுதியாக நேற்று நம்மில் ஒருவர் நம்ம முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின்னர் தனி விமானம் மூலம் நேற்று இரவு அபுதாபியில் இருந்து கிளம்பி இன்று சென்னை திருபினார்.
இந்நிலையில் இன்று அதிகாலை விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ நான் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக துபாய், அபுதாபி பயணம் சென்று வந்திருக்கிறேன். என்னுடைய இந்தப் பயணம் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் அமைந்தது. தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக வெளிநாட்டினர் பாராட்டு தெரிவித்தனர். தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீகளை ஈர்க்கும் பொருட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு - சென்னை விமான நிலையம்.#CMMKSTALIN | #TNDIPR | @CMOTamilnadu @mkstalin
— TN DIPR (@TNDIPRNEWS) March 28, 2022
@mp_saminathan @jeyaseelan_vp
https://t.co/HsesjtbAGv
6 முக்கிய நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். அதிமுக ஆட்சியில் அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தக்களும் வெறும் காகித கப்பல்களாகவே இருந்தன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் விரைவாக தொழில் தொடங்கி வேலை வாய்ப்பாக மாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். துபாயில் இருந்தப் போது நான் தமிழ்நாட்டில் இருந்ததை போல் உணர்ந்தேன்” எனத் தெரிவித்தார்.
தமிழகம் திரும்பிய முதலமைச்சருக்கு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, டிஜிபி சையிலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தொழிற்துறை செயலர் கிருஷ்ணன் மற்றும் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்