28 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்க: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
இலங்கை சிறையில் வாடும் 28 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 28 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை சிறையில் வாடும் 28 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
’மனவேதனை அளிக்கிறது’
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் துன்புறுத்தப்படுவது மன வேதனை அளிக்கிறது என்றும், தமிழ்நாடு அரசு பல கண்டனக் கடிதங்களை அனுப்பியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன, தமிழ்நாடு மீனவர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலான இலங்கைக் கடற்படையின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படியும் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த 104 படகுகளும் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும், 16 இந்திய மீனவர்கள் ஏற்கெனவே இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 28 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க உரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பறிக்கும் வகையிலான இலங்கைக் கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி திட்டத்தினை உடனடியாக வகுத்திட வேண்டுமென்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
28 மீனவர்கள் சிறைபிடிப்பு
நாகை மாவட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மார்ச் 7ஆம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்ற நிலையில், கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 16 தமிழக மீனவர்களை முன்னதாக எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை மீனவர்கள் சிறைபிடித்தனர்.
இவர்களை இலங்கை காங்கேசன் கடற்படை முகாமுக்கு கூட்டிச் சென்று அங்கு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மீனவர்கள் சிறப்பிடிக்கப்பட்டதை அறிந்து நாகை அக்கரைப்பேட்டையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் கலங்கி அழுதனர்.
அதேபோல் இன்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்த புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேடை விசாரணைக்காக இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர். இந்நிலையில், இந்த 18 மீனவர்களையும் விடுவிக்கும்படி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் படிக்க: NLC: என்எல்சிக்கு எதிரான மக்களின் வலியை உணருங்கள்: வேளாண் நிலங்களை பறிப்பதை கைவிடுக - அன்புமணி வலியுறுத்தல்