மேலும் அறிய

ஹரியானாவை வைத்து தமிழகத்தில் ப்ளான் போடும் பாஜக! - தமிழிசை சொல்லும் புது கணக்கு!

"தாமரை கண்டால் திமுகவினர் பயப்படுகிறார்கள். ஆகையால் தான் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு  எங்க பாத்தாலும் பாஜக பத்தி பேசுகிறார்கள்" - தமிழிசை செளந்தரராஜன்

*சென்னையில் 85 சதவீதம் அளவிற்கு மழைநீர் வடிகால்  அமைக்கும் பணி நிறைவடையவில்லை என  தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம் சாட்டி உள்ளார்*

*ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 80 சதவீதம் அளவிற்கு மக்கள் பயனடைந்து உள்ளார்கள்*

*தாமரையைக் கண்டால் திமுகவினர் பயப்படுகிறார்கள்.  ஆகையால் தான் உதயநிதி ஸ்டாலின் மற்றும்  சேகர் பாபு  எங்க பாத்தாலும் பாஜக பத்தி பேசுகிறார்கள்*

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அன்னை முதியோர் உள்ளம் என்ற ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அங்கு உள்ள முதியோர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆன பிரதமர் காப்பீடு திட்டத்தை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய  தமிழிசை சௌந்தரராஜன்  “பாரத பிரதமர் 70 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை பெற  காப்பீட்டு திட்டத்தை பிரதமர் நாட்டில் உள்ள அனைத்து முதியோர்களுக்கும் வழங்கி உள்ளார்.

முதல்வரின் காப்பீட்டு  திட்டத்தை ஆயுஷ்மான் பாரத்  திட்டத்தில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் வெளியே கூறும் பொழுது முதலமைச்சர் காப்பீடு திட்டம் தான்தான் எனக் கூறுகிறார்கள் .

மழை நீர் வடிகால் திட்டம் 85 சதவிகிதம் நடைபெறவில்லை. திருவொற்றியூர் பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் நடைபெறவில்லை. அந்த பகுதியில் உள்ள வரைபடங்கள் சரியாக போடப்படவில்லை. மக்கள் இன்னும் மழையில் தத்தளிக்கின்ற சூழ்நிலைதான் ஏற்பட்டுள்ளது. விளம்பரம் மட்டும் செய்து கொண்டு இருக்காமல் தமிழக அரசு செயல்பட வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

”சென்ற ஆண்டு காவிரிக்கு 100 டிஎம்சி கடந்தாண்டு கிடைத்துள்ளது. ஆனால் 6 நீராக கடலில் கலந்து வீணாகி உள்ளது. இத்தனை ஆண்டுகளில்  எத்தனை அணை கட்டியிருக்கலாம். ஒரு அணை கூட தற்போது வரை கட்டவில்லை”  என அவர் விமர்சனம் செய்துள்ளார்.

 தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளின் குழந்தைகள் சேர்க்கை குறைந்து இருப்பதாகவும்  அதாவது தென் மாநிலங்கள் ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஒப்பிடத்தின் போது  90% தான் இருப்பதாகவும் இதனை பள்ளிக் கல்வித் துறை கவனத்தில் கொள்ள வேண்டும் அனைத்து துறையிலும் முன்னோடி என்று  சொல்லிக் கொள்கிறார்கள் இது போன்ற பல துறைகளில் அவர்கள் முன்னேறவில்லை  என குற்றம் சாட்டி உள்ளார்.

கூட்டணி கட்சியில் உள்ளவர்களே திமுக குறித்து குறை சொல்லி வருகிறார்கள். பாலகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்டோர் காவல்துறை மற்றும் அதிகார பகிர்வு குறித்து பேசு துவங்கியிருக்கிறார்கள். ஆனாலும் அதே கூட்டணியில் தான் நீடித்து இருக்கிறோம் என்று கூறுகிறார்கள்.  இது எந்த அளவுக்கு சாத்தியம் என தெரியவில்லை.

தமிழ்த்தாய் வாழ்த்து இல்லாமல் முதலமைச்சர் கலந்து கொண்ட  நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. இது மிக மிக வருத்தப்பட வைக்கிறது. குறையோடு பாடிய தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என்றால் பாடல்கள் இல்லை என்றால் அதற்கு யார் பொறுப்பேற்றார்கள் என அவர் கேள்வி எழுப்பி உள்ளார் .

குளத்தில் கூட தாமரை மலர்வதை உங்களால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் பல குடும்பங்களில் இன்று தாமரை மலர்ந்து கொண்டிருக்கிறது. இதைக் கூட அவர்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்  

தமிழகத்தில் 80 சதவீதம் அளவிற்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் மக்கள் பயனடைந்துள்ளார்கள். இந்தியா முழுவதும் பிரதமர் காப்பீட்டு திட்டம் பயன்படுத்த முடியும்.

 மத்தியில்  பலம் பெற்ற கட்சி என்பதால் எங்கள் கூட்டணியில் தலைமை ஏற்போம். விஜய்  இப்பொழுதுதான் காலடி எடுத்து வைத்துள்ளார்.   அவரின் செயல்களை குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,

திராவிட முன்னேற்றத்தின் கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் அதிகாரம் வேண்டுமென்றால் 2026 தேர்தலுக்குள் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தலில் எதிர்ப்பார்கள். ஆனால் ஒரே குடும்பம் அதிகாரத்தை ஆதரிப்பார்கள். இதுதான் அவர்கள் நிலைப்பாடு.

ஹரியானாவில் 2009ல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றோம். தற்போது அங்கு ஆட்சியை பிடித்துள்ளோம். அதேபோல இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் வளர்ச்சி அடைகிறோம்.

குளத்தில் தாமரையை பார்த்தால் சேகர் பாபுவிற்கு பயம் வருகிறது. அதேபோன்று உதயநிதி ஸ்டாலினுக்கும் தாமரை பார்த்தால் பயம் வருவதால் தான் எங்கள் குறித்து பேசுகிறார் என அவர் தெரிவித்துள்ளார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
சிவப்பு சூட்கேஸில் கிடந்த இளம்பெண்ணின் உடல்.. பதறிய மக்கள்.. நெடுஞ்சாலையில் பரபரப்பு!
சிவப்பு சூட்கேஸில் கிடந்த இளம்பெண்ணின் உடல்.. பதறிய மக்கள்.. நெடுஞ்சாலையில் பரபரப்பு!
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Embed widget