மேலும் அறிய

Bakrid 2023: தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை எப்போது? .. அரசு தலைமை ஹாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Bakrid 2023:  பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 29- ம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாஹூதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். 

 பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 29- ம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாஹூதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். 

இஸ்லாமியர்களின் ஈகை திரு நாளான பக்ரீத் பண்டிகை இந்த ஆண்டில் ஜூன் -29 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் துக்ஹஜ் மாத முதல் பிறை தென்பட தொடங்கியுள்ளது. 

அன்றைய தினத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் குர்பானி கொடுத்து தொழுது, ஒற்றுமையுடன் இணைந்து வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது வழக்கம்.

ஈகைத் திருநாள்

Bakrid 2023: தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை எப்போது? .. அரசு தலைமை ஹாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஈத்-உல்-ஜுஹா என்பது வரலாற்றில் இறைத்தூதர் நபி இப்ராஹிமின் தியாகத்தை நினைவுகூறும் ஒரு பண்டிகை ஆகும். இதனால் இந்த நாள் ஈகைத் திருநாள் அல்லது தியாகத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது.

பண்டிகை என்று பொருள்படும் ஈத் எனும் அரபு வார்த்தை மற்றும் தியாகம் என்று பொருள்படும் ஜூஹா எனும் வார்த்தைகள் இணைந்து ஈத் அல் ஜூஹா எனும் வார்த்தைப் பிரயோகம் உருவாகி உள்ளது.

இஸ்லாமிய மாதமான ஜுல் ஹிஜ்ஜாவின் 10ஆவது நாளில் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை, சுமார் மூன்று நாள்களுக்கு கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு ஈத்-உல்-ஜுஹா கொண்டாட்டங்கள் நாளை (ஜூலை 10)  தொடங்க உள்ளது. இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளின்படி, இப்ராஹிம் நபி அல்லாவின் மீதுள்ள வலுவான நம்பிக்கையால் செய்த தியாகத்தை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

நபி இப்ராஹிமின் தியாகம்

Bakrid 2023: தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை எப்போது? .. அரசு தலைமை ஹாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம், சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார்.

நெடுநாள்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இறைவன் அருளால் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இஸ்மாயீல் எனப் பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். 

இப்ராஹிமின் மகன் இஸ்மாயீல் பால்ய வயதை அடைந்தபோது அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள் இப்ராஹிம்மின் கனவின் மூலம் கட்டளையிடுகிறார். இதைப்பற்றி  மகனிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியோடு பலியிட முயன்றபோது சிஃப்ரயீல் என்னும் வானவரை அனுப்பி இறைவன் அதனைத் தடுத்து மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்து இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை பலியிடுமாறு இப்ராஹிமுக்கு கட்டளையிட்டார் என நம்பப்படுகிறது.

மேற்கூரிய இந்தச் சம்பவத்தின் அடிப்படையிலேயே  தியாகத் திருநாள் கொண்டாடப்படுகின்றது.

பக்ரீத் கொண்டாட்டம்

Bakrid 2023: தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை எப்போது? .. அரசு தலைமை ஹாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பக்ரீத் தினத்தன்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சூரியன் முழுமையாக உதித்த பிறகே மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடத்துகிறார்கள். மதியத் தொழுகை நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும். தொழுகைக்குப் பிறகு, இஸ்லாமியர்கள் பிரசங்கங்களில் கலந்து கொள்கிறார்கள்.

சிறப்பு தொழுகைக்குப் பிறகு வீடு திரும்பும் மக்கள் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு ஆடுகளை குர்பானியாகக் கொடுத்து அதனைப் பகிர்ந்தளித்து உண்கிறார்கள்.

பகிர்ந்தளித்தல், ஹஜ்

உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்கள் இந்த நாளில் இறைவனின் பெயரால் ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்ட மிருகங்களை பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாகப் பிரித்து, ஒரு பங்கினை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.

Bakrid 2023: தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை எப்போது? .. அரசு தலைமை ஹாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பொருளாதாரத்தில் சிறப்பாக உள்ள இஸ்லாமியர்கள் இதனை அடிப்படை ஹஜ் கடமைகளில் ஒன்றாக செய்ய வேண்டும்.

உணவு, மகிழ்ச்சியை மற்றவருடன் பகிர்ந்து கொள்வது, ஏழை மக்களுக்கு உதவுவது, நபி இஸ்மாயிலை நினைவுகூறுவது உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் இந்த நன்னாளை புத்தாடைகள் அணிந்து இஸ்லாமியர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget