Breaking LIVE: கனமழை பாதிப்பு - மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் நிலவரம் குறித்த முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கொட்டி வருகிறது. நேற்று இரவு மட்டும் சென்னை நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. புறநகரான எண்ணூரில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு பெய்த மழையினாலே கடுமையான அவதிக்குள்ளாகியுள்ள சென்னைவாசிகள் இந்த மழையினால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையின் பெரும்பாலான சாலைகள், முக்கிய சந்திப்புகள் எல்லாம் நீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை அளிப்பதற்காக உதவி எண்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலையில் இருந்து மட்டும் பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு மதியம் 12 மணிக்குள் சுமார் 300க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் உதவிகோரி வந்துள்ளது.
உதவி கோரி அழைப்பு விடுத்தவர்கள் பலரும் தாங்கள் மழைநீரினால் சூழப்பட்டிருப்பதாகவும், தங்களது பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். காலை வரை சுமார் 2.5 லட்சம் மக்களுக்கு போதியளவிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 1800 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
Breaking News Live: கரண்ட் பில் கட்ட கால அவகாசம்
சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த இன்று முதல் 15 நாட்கள் அவகாசம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி
TN Rain Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
TN Rain Holiday: பள்ளி விடுமுறை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
Chennai Rains Live Update: மழை, வெள்ள பாதிப்பு குறித்து பொய் பரப்புரை - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை
முதலமைச்சரின் பாராட்டை பெற்ற காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி
#JUSTIN | 'முதலமைச்சரே என்னை பாராட்டிவிட்டார்' களத்தில் பணியாற்றும் என் போன்ற போலீசாருக்கு இதைவிட பெருமை என்ன வேண்டும் - காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிhttps://t.co/wupaoCQKa2 | #MKStalin | #ChennaiRains | #ChennaiRains2021 pic.twitter.com/ej5AGhsAEE
— ABP Nadu (@abpnadu) November 11, 2021