மேலும் அறிய

அடிச்சது ஜாக்பாட்.. ஜனவரி முதல் ரேஷன் அட்டைதாரர் அனைவருக்கும் ரூ. 1000 மகளிர் உரிமைத்தொகை!

ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அருப்புக்கோட்டையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். 

வரும் ஜனவரி மாதத்திற்கு பின் ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உறுதி அளித்துள்ளார். 

அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்:

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, விஜய்யின் அரசியல் வருகையை தொடர்ந்து தினம் தினம் அரசியல் அதிரடிகள் நிகழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில், ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அருப்புக்கோட்டையில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகளின் தொடக்க விழாவில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். 

அதோடு, முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என கூறியுள்ளார். 

"அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை"

வரும் தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க திமுக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே, மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாஜகவுடன் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் கூட்டணி வைக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார். அதோடு, விஜய்யின் அரசியல் வருகையும் தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது.

திமுக, பாஜக எதிர்ப்பு என இரண்டையும் கையில் எடுத்துள்ளார் விஜய். இவர்களை தவிர, நாம் தமிழர் கட்சியும் முக்கிய அரசியல் சக்தியாக உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் ஏற்கனவே சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.

தவெக தலைவர் விஜய்யுடன் ஒரே மேடையில் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்து கொள்ள உள்ளதாக வெளியான செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகினாலோ அல்லது அதிமுக கூட்டணிக்கு பாஜக திரும்பினாலோ போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, சவால்களை சமாளித்து ஆட்சியை தக்க வைக்க அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Doctors Strike: துணை முதல்வர் போட்ட ஸ்கெட்ச்! மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - பின்னணியில் தமிழக அரசு செய்தது என்ன? 
Doctors Strike: துணை முதல்வர் போட்ட ஸ்கெட்ச்! மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - பின்னணியில் தமிழக அரசு செய்தது என்ன? 
அடிச்சது ஜாக்பாட்.. ஜனவரி முதல் ரேஷன் அட்டைதாரர் அனைவருக்கும் ரூ. 1000 மகளிர் உரிமைத்தொகை!
அடிச்சது ஜாக்பாட்.. ஜனவரி முதல் ரேஷன் அட்டைதாரர் அனைவருக்கும் ரூ. 1000 மகளிர் உரிமைத்தொகை!
அரசு ஊழியர் வாழ்க்கையை இருட்டாக்குவதா? நாளை கருப்புத்துணி கட்டி போராட்டம்- CPS ஒழிப்பு இயக்கம் அழைப்பு!

“48 மணி நேரத்தில் 3 கத்திக்குத்து சம்பவங்கள்” சென்னைவாசிகள் அதிர்ச்சி..!
“48 மணி நேரத்தில் 3 கத்திக்குத்து சம்பவங்கள்” சென்னைவாசிகள் அதிர்ச்சி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Woman Murder:  சிறுநீர் கழித்த பெண் வியாபாரி! வெட்டிக் கொன்ற ரவுடி! சென்னையில் பகீர்!Seeman NTK : சீமானுக்கு ஆப்புவைக்கும் ஆடியோ! உளவுத்துறைக்கு அதிரடி டாஸ்க்! சிக்கலில் நாம் தமிழர்Guindy doctor stabbed : அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து! HOSPITAL-ல் பகீர்! வட மாநிலத்தவர் கொடூரம்Hosur Fake Doctors : ’’10th படிச்ச நீ டாக்டரா?’’ டோஸ் விட்ட அதிகாரிகள்! வசமாய் சிக்கிய பெண்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Doctors Strike: துணை முதல்வர் போட்ட ஸ்கெட்ச்! மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - பின்னணியில் தமிழக அரசு செய்தது என்ன? 
Doctors Strike: துணை முதல்வர் போட்ட ஸ்கெட்ச்! மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - பின்னணியில் தமிழக அரசு செய்தது என்ன? 
அடிச்சது ஜாக்பாட்.. ஜனவரி முதல் ரேஷன் அட்டைதாரர் அனைவருக்கும் ரூ. 1000 மகளிர் உரிமைத்தொகை!
அடிச்சது ஜாக்பாட்.. ஜனவரி முதல் ரேஷன் அட்டைதாரர் அனைவருக்கும் ரூ. 1000 மகளிர் உரிமைத்தொகை!
அரசு ஊழியர் வாழ்க்கையை இருட்டாக்குவதா? நாளை கருப்புத்துணி கட்டி போராட்டம்- CPS ஒழிப்பு இயக்கம் அழைப்பு!
அரசு ஊழியர் வாழ்க்கையை இருட்டாக்குவதா? நாளை கருப்புத்துணி கட்டி போராட்டம்- CPS ஒழிப்பு இயக்கம் அழைப்பு!
“48 மணி நேரத்தில் 3 கத்திக்குத்து சம்பவங்கள்” சென்னைவாசிகள் அதிர்ச்சி..!
“48 மணி நேரத்தில் 3 கத்திக்குத்து சம்பவங்கள்” சென்னைவாசிகள் அதிர்ச்சி..!
மருத்துவர் மீது தாக்குதல்; காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - காவல் ஆணையர் விளக்கம்

“கத்திக்குத்துப்பட்ட மருத்துவர் பாலாஜி யார், அவர் எப்படி?” வெளியான புதிய தகவல்..!

"கத்திக்குத்து நடந்த இடத்திற்கே சென்ற துணை முதல்வர்” மருத்துவமனையில் உதயநிதி அதிரடி ஆய்வு..!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!

Embed widget