TN Rain Alert: ஆபீஸ் முடிஞ்சு கிளம்புறீங்களா? 7 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - எந்தெந்த பகுதிகளில்?
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 மாவட்டங்களில் கனமழை:
நேற்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சியானது இன்று லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
In response #TNRains the Indian Air Force (IAF) has deployed Medium Lift Helicopters (MLH) and Advanced Light Helicopters (ALH) Dhruv for HADR efforts.
— Defence PRO Chennai (@Def_PRO_Chennai) December 19, 2023
IAF have rescued 4 stranded persons; included a pregnant woman and an infant in the morning today. @IAF_MCC @IafSac @pibchennai pic.twitter.com/Qq6pf6qipk
வரலாறு காணாத மழை:
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் நெல்லை, தூத்துகுடி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பதிவானது. இதனால் இந்த மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது. மக்கள் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து தவித்து வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படை, இந்திய விமானப் படை, கடலோர காவல் படை என பல்வேறு துறைகள் இணைந்து மீட்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கிய பயணிகள் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழந்துள்ளதால் மீட்பு பணிகள் விரைந்து செயல்படுத்த கூடுதலாக ஹெலிகாப்டர்களை உடனடியாக தமிழ்கதிற்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத மழையானது படிப்படியாக குறையும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்த வளிமண்டல சுழற்சி தற்போது அரபிக் கடலில் நகர்ந்து சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.