Tamilnadu News LIVE: தமிழ்நாட்டில் 1669 பேருக்கு கொரோனா தொற்று: 17 பேர் உயிரிழப்பு!
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE
Background
Tamil Nadu News LIVE Today:
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இன்று நடைபெறுகிறது. இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் மது வகைகள், பெட்ரோல் தவிர அனைத்துப் பொருட்களும் சேவைகளும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டு விட்டன. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர பல காலமாக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையைப் பொறுத்து உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கூட எரிபொருள் விலையை அரசு குறைப்பதில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. அதற்கு, மத்திய அரசோ முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பெறப்பட்ட ஆயில் பாண்ட் எனப்படும் எண்ணெய் பத்திரங்கள் மூலமாக ஏற்பட்டுள்ள கடன் சுமை காரணமாகவே பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியவில்லை என்று கூறி வருகிறது.
தமிழ்நாட்டில் 1653 பேருக்கு கொரோனா தொற்று: 22 பேர் உயிரிழப்பு!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1653 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே 22 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 1669 பேருக்கு கொரோனா தொற்று: 17 பேர் உயிரிழப்பு!
தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1693இல் இருந்து 1,669 ஆக குறைந்துள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு நான்கு நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் மேலும் 196 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 17 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,288 ஆக உயர்ந்துள்ளது.
செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் 1,600 தடுப்பூசி முகாம்கள்
தடுப்பூசி முகாம் நடைபெறும் செப்டம்பர் 19ஆம் தேதியன்று சென்னையில் 1,600 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. முகாம்கள் அமைந்துள்ள இடங்களை www.chennaicorporation.gov.in தளத்தில் காணலாம். 044-25384520, 46122300 என்ற எண்களில் தொடர்புகொண்டும் தடுப்பூசி முகாம் குறித்து அறியலாம்.
ஒரே நாளில் 2 கோடி பேருக்குக் கொரோனா தடுப்பூசி
iந்தியாவில் இன்று ஒரே நாளில் 2 கோடி பேருக்கும் மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மதியம்1:30 மணி நிலவரப்படி ஒரு கோடிக்கும் மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு
தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி நாளை காலை 10.30 மணிக்கு பதவியேற்கிறார்.