TN Headlines: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்தது என்ன? முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ இங்கே..
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
- CM Stalin to PM Modi: சனாதனம் குறித்த உதயநிதி பேச்சு.. பிரதமர் மோடி விஷயம் தெரியாமல் பேசலாமா? - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி
சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி பேசியதன் முழுவிவரம் தெரியாமல் பிரதமர் மோடி பேசலாமா? என, முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிகையில், “ சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்த சில கருத்துகளைத் தெரிவித்தார். மேலும் படிக்க
- BJP ON Udhayanidhi: பாஜக அடுத்த அதிரடி.. உதயநிதிக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. ஆளுநர் ரவி என்ன செய்ய போகிறார்?
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில், வெறுப்புப் பிரச்சாரம் செய்த அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று மாண்புமிகு ஆளுநர் உத்தரவிடக் கோரியும், அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது செய்த பதவிப் பிரமாணத்தை மீறி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக” குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க
- TN CM MK Stalin to Visit Delhi : ‘சனாதன சர்ச்சை – திடீரென டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்’ காரணம் என்ன? Exclusive தகவல்கள்..!
டெங்கு, மலேரியா போன்று சனாதனத்தையும் நாம் ஒழிக்க வேண்டும் என்று விளையாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகள் வரை பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க
- துணை வேந்தர்கள் தேடுதல் குழு நியமனம்: ஆளுநரின் எதேச்சதிகார செயல்.. ஜவாஹிருல்லா கண்டனம்
பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் தேடுதல் குழுவைத் தன்னிச்சையாக நியமித்தது மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் செயல் என்றும் இது ஆளுநரின் எதேச்சதிகாரம் எனவும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி: ’’பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக ஆட்சிக் குழு (சிண்டிகேட்) உறுப்பினர், தமிழக அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி என மூன்று பேர் மட்டுமே தற்பொழுது கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். மேலும் படிக்க
- Sanatan Dharma Row:”நானும் ஆன்மிகவாதிதான்: நடிகர் வடிவேலு உடன் போட்டி போடுகிறார் மோடி;பிழைத்து போகட்டும்” - சரமாரியாக சாடிய உதயநிதி
சனாதனம் குறித்து பேசியது தொடர்பாக அனைத்து வழக்குகளையும் சட்டப்படி எதிர்கொள்வேன் என இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாமியார் மீது வழக்கு போடுவது உருவ பொம்மைகளை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என திமுகவினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் மதிக்கிறோம் என உதயநிதி ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க