TN Head Lines may 26th: திமுக அமைச்சர் வீட்டில் ஐடி ரெய்டு... பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்... 3 மணி தலைப்புச் செய்திகள்!
தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
‘ஐடி கார்டை காட்டுங்க’ .. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டுக்கு வந்த பெண் அதிகாரியை சுற்றிவளைத்த தொண்டர்கள்..!
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் திமுக தொண்டர்கள் காரை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி தமிழ்நாடு அரசின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக உள்ளார். மேலும் படிக்க
ஐ.டி.ரெய்டு.. தொண்டர்களால் கடுப்பான அதிகாரிகள்.. விளக்கம் கொடுத்த செந்தில் பாலாஜி ..!
தன்னுடைய வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெறுவதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் மின்சாரத்துறை அமைச்சராக உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர், கோவை, ஹைதராபாத், கேரளா உள்ளிட்ட ஊர்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையானது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் படிக்க
1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
வெயில் சுட்டெரிப்பதால் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு, ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 7ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
'சிவப்பு கம்பளம் விரித்து தமிழ்நாடு வரவேற்கிறது’ . ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு..!
ஜப்பான் நாட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலும் படிக்க
தமிழ் மொழி விவகாரம்; நேருக்கு நேராக விவாதிக்க அண்ணாமலை தயாரா?: அமைச்சர் பொன்முடி சவால்
தமிழ் மொழி மீது யாருக்கு அதிக அக்கறை என்னும் விவகாரத்தில் நேருக்கு நேராக விவாதிக்க அண்ணாமலை தயாரா என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சவால் விடுத்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழிக் கல்வி உள்ளிட்ட சில பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விவகாரத்தில் துணை வேந்தர் செய்தது தவறு என்றும் அது அரசுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட முடிவு என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க