மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

TN Rain Alert: வலுவடைந்த வடகிழக்கு பருவமழை.. 4 நாட்களுக்கு இன்னும் மழை இருக்கு!

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

23.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை,  திண்டுக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

24.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

25.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

26.11.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

27.11.2023 முதல் 29.11.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான /  மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 37, கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) 24, கடலாடி (ராமநாதபுரம்) 17, கவுந்தப்பாடி (ஈரோடு), வாலிநோக்கம் (ராமநாதபுரம்) தலா 15, வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), ஆயிக்குடி (தென்காசி), குன்னூர் PTO (நீலகிரி) தலா  13, தக்கலை (கன்னியாகுமரி) 12,  கருப்பாநதி அணை (தென்காசி) 11, காயல்பட்டினம் (தூத்துக்குடி), மானாமதுரை (சிவகங்கை), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), பர்லியார் (நீலகிரி), பெருங்களூர் (புதுக்கோட்டை), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி) தலா  10, அணைகெடங்கு (கன்னியாகுமரி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), அழகரை எஸ்டேட் (நீலகிரி), பரமக்குடி (ராமநாதபுரம்), திருச்செந்தூர் (தூத்துக்குடி), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), கழுகுமலை (தூத்துக்குடி), ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), ராமநாதபுரம் (ராமநாதபுரம்), சிங்கம்புணரி (சிவகங்கை) தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப்பகுதிகள்:

23.11.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 


வங்க கடல் பகுதிகள்:

26.11.2023: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
27.11.2023: தென்கிழக்கு  வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:  

23.11.2023: லட்சதீவு பகுதிகள், கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 26-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
Kangana Ranaut: கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Jagan Mohan Reddy vs Chandra Babu Naidu | ”ஆந்திராவில் வன்முறை TDP-யின் அட்டூழியம்” - ஜெகன் மோகன்Kangana Ranaut | கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! தாக்கிய CSIF பெண் அதிகாரி விமான நிலையத்தில் பரபரப்புLok sabha election ADMK | அதிமுகவை காலி செய்த EX அதிமுகவினர்! குழப்பத்தில் சீனியர்கள்Mayawati INDIA Bloc | மோடியை காப்பாற்றிய மாயாவதி! அந்த 16 தொகுதி இல்லன்னா... I.N.D.I.A ஆட்சிதான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
Kangana Ranaut: கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Rahul Gandhi: பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது - ராகுல் காந்தி
Rahul Gandhi: பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது - ராகுல் காந்தி
PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
NTK Vote Bank: 1% முதல் 8% : நாளுக்கு நாள் உயரும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி; சொன்னதைச் செய்யும் சீமான்? என்ன காரணம்?
NTK Vote Bank: 1% முதல் 8% : நாளுக்கு நாள் உயரும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி; சொன்னதைச் செய்யும் சீமான்? என்ன காரணம்?
BJP Annamalai:ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
Embed widget