TN Rains: தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு- எந்த மாவட்டங்கள் தெரியுமா..!
தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வளிமண்டல கீழ்டுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
5 மாவட்டங்களில் மிக கன மழை:
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 24, 2022
18 மாவட்டங்களில் கன மழை:
நீலகரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, செங்கல்பட்டு,காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்க்களில் இன்று முதல் 5 நாடகளுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 24, 2022
சென்னை:
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணாப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 24, 2022
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில், காற்றானது மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக் கூடும் என்பதால், அடுத்த 3 நாட்களுக்கு இப்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்பநிலை:
24/08/2022 காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ( °C) மற்றும் இயல்பிலிருந்து அதன் விலகல் (°C) pic.twitter.com/mGVGVcrN5l
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 24, 2022
மேலும் கூடுதல் தகவல்களுக்கு வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.RMC Chennai (imd.gov.in)
மழை பதிவு:
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 24, 2022