மேலும் அறிய

TN Rain Alert: சென்னையில் விடிய விடிய மழை! காலை 10 மணி வரை இப்படி தான் இருக்கும் - லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய்ம தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரம்:

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்  எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்:

குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய  தென்மேற்கு - மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழை வரும் 27 ஆம் தேதி வரை தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டர்):

நுங்கம்பாக்கம்- 37.7, மீனம்பாக்கம்- 15.3, வால்பாறை- 58.0, புதுச்சேரி - 28.0, கடலூர்- 16.0, சென்னை எண்ணூர் 50.0, காஞ்சிபுரம் கட்டப்பாக்கம் 1.0, கடலூர் சிதம்பரம் - 11.0, கடலூர் விருத்தாசலம் 43.0 மில்லிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

தமிழக கடலோரப்பகுதிகள்:

22.11.2023: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்க கடல் பகுதிகள்:

22.11.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
Embed widget