மேலும் அறிய

TN Rain Alert: மதியம் 1 மணிவரை 11 மாவட்டங்களில் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்? அடுத்த 3 மணிநேரத்திற்கான மழை நிலவரம் இதோ..

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிபேட், திருப்பத்தூர், திண்டுக்கல், நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது. நாளை தொடங்கி 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நகரின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. மடிப்பாக்கம், மேற்கு தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, சின்னமலை, அடையாறு, மத்திய கைலாஷ் உளிட்ட பகுதிகளில் நல்ல மழை பதிவானது. தொடர் மழை காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அண்ணா சாலை, கிண்டி, சின்னமலை, திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலகம் செல்வோர் தக்க நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். நேற்றைய தினம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 38 செ.மீ மழை பதிவானது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செண்டிமீட்டர்):   

அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்), சின்னகளார் (கோயம்புத்தூர் மாவட்டம்) 8, க்ளென்மார்கன் (நீலகிரி மாவட்டம்) 7, நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்), சின்கோனா (கோயம்புத்தூர் மாவட்டம்), வால்பாறை பி.டி.ஓ (கோயம்புத்தூர் மாவட்டம்), சோலையார் (கோவை மாவட்டம்) தலா 6, கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்), பார்வூட் (நீலகிரி மாவட்டம்), வால்பாறை பிஏபி (கோவை மாவட்டம்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை மாவட்டம்), மேல் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) தலா 5, ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி மாவட்டம்), அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்), தேவாலா (நீலகிரி மாவட்டம்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி மாவட்டம்) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.  

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  நடிகர் ரஜினிகாந்துக்கு நவீன சிகிச்சை.. அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்த விளக்கம் என்ன?
நடிகர் ரஜினிகாந்துக்கு நவீன சிகிச்சை.. அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்த விளக்கம் என்ன?
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  நடிகர் ரஜினிகாந்துக்கு நவீன சிகிச்சை.. அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்த விளக்கம் என்ன?
நடிகர் ரஜினிகாந்துக்கு நவீன சிகிச்சை.. அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்த விளக்கம் என்ன?
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
New PPF Rules: பிபிஎஃப் கணக்குகளுக்கான வட்டி ரத்து, கூடுதல் கணக்குகள் இனி இயங்காது - மத்திய அரசு அதிரடி
New PPF Rules: பிபிஎஃப் கணக்குகளுக்கான வட்டி ரத்து, கூடுதல் கணக்குகள் இனி இயங்காது - மத்திய அரசு அதிரடி
Embed widget