மேலும் அறிய

தமிழ்நாடு மின்சாரத் துறையில் தேவைப்படும் மாற்றங்கள் என்ன?

நிலக்கரியில் இருந்து சூரிய மின்சாரம் என்பது தொழில்நுட்பம் சார்ந்ததாக மட்டும் இல்லாமல் , சமூக, பொருளாதார மாற்றத்திற்கான அடிப்படையாகவே பார்க்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு மின்சாரத் துறையில், தவறான நிறைவாகத் திறன் காரணமாக பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிவிக்கை தெரிவித்தள்ளது. 2021 ஏப்ரல் மாத நிலவரப்படி, தமிழக மின்வாரியத்தின் மொத்த கடன் மட்டும் 13781.81 - கோடி ரூபாய் ஆகும். காற்று மற்றும் சூரிய ஆற்றல் ஆதாரங்கள் மிகுந்த தமிழ்நாட்டில் இதுபோன்ற செய்திகள் வருத்தமளிப்பதாக உள்ளன.   

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் 8 சதவித விழுக்காடு வாடிக்கையாளர்கள் விவசாயத் துறையை சேர்ந்தவர்கள். கிட்டத்தட்ட 15% மின்சார உற்பத்தியை விவாசாயத் துறை மக்கள் பயன்படுத்துகின்றனர். பருவமழை ஏமாற்றம், வறட்சி, பின்தங்கிய  பொருளாதர நிலை, கடன் தொல்லை போன்ற துயரங்களால் அல்லல்படும் விவாசாய மக்களுக்கு இலவச மின்சாரத் திட்டம் அடிப்படை வாழ்வாதாரமாக உள்ளது.

தமிழ்நாடு மின்சாரத் துறையில் தேவைப்படும் மாற்றங்கள் என்ன? 

மாநிலத்தின் மொத்த மின்சார உற்பத்தியில், 30% மின்நுகர்வை வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு 100 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் மிகப்பெரிய வாங்கு வங்கியாக இருப்பதால், மின்நுகர்வு கட்டணம் மிகப்பெரும் அரசியலாக பார்க்கப்படுகிறது. ஓவ்வொரு தேர்தல் வாக்குறிதியிலும் வீட்டு மின் உபயோகிப்பாளர்களை திருப்திப்படுத்தவே அரசியல் கட்சிகள் விரும்ம்புகின்றன. மேலும், கைத்தறி மின் நுகர்வோர்களுக்கு தற்போது  200 யூனிட்டுகள் இலவச மின்சாரமும், மற்றும் விசைத்தறி  மின் நுகர்வோர்களுக்கு 750 யூனிட்டுகள் இலவச மின்சாரமும் வழங்கப்பட்டுவருகிறது.

இந்த, இலவச மின்சாரத் திட்டங்களுக்கு தேவையான நிதியை சமாளிக்க வணிகம் மற்றும் தொழிற்சாலை சார்ந்த பயனிட்டாளர்களுக்கு அதிகப்படியான மின்கட்டணத்தை அரசு வசூலித்து வருகிறது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் செயல்படும் தொழிற்சாலைகள் கடுமையான நிதிசிக்கல்களை  சந்தித்து  வருகின்றன. 

தமிழ்நாடு மின்சாரத் துறையில் தேவைப்படும் மாற்றங்கள் என்ன?        

உதாரணமாக, தமிழ்நாட்டில் செயல்படும் தொழிற்சாலைகளிடம் ஒரு மெகாவாட் யூனிட் மின்சார நுகர்வுக்கு 100 அமெரிக்கா டாலர் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மின்சாரக் கட்டணங்களால், எளிதில் தொழில் செய்யமுடியவில்லை என 20 சதவிகிதத்துக்கும் அதிகமான தொழிற்நிறுவனங்கள் தெரிவிப்பதாக இந்தியா  பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்டண கட்டண விகிதம் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களை விடகூடுதலாக இருந்தாலும், அதன் மாநில மொத்த உள்ளநாட்டு உற்பத்தி அதிகமாக உள்ளது. அதனால், அங்கு செயல்படும் தொழிற்நிறுவனங்கள் கணிசமான முறையில் லாபம்  பெறுகின்றனர். 10க்கும் குறைவான தொழில்நிறுவனங்கள் மட்டுமே மின்சாரக் கட்டணம் சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்குவதாக கருதுகின்றனர். 

மேலும், தமிழ்நாடு மின்நுகர்வுக் கழகம் ஒரு யூனிட் மின்சாரத்தை தான் வாங்கும் விலையை விட குறைவான விலைக்கு விற்றுவருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்கள் உற்பத்தியாகும் செலவை விட கூடுதல் விலைக்கு ஒரு யூனிட் கரன்ட்- ஐ விற்கின்றன.     

தமிழ்நாடு மின்சாரத் துறையில் தேவைப்படும் மாற்றங்கள் என்ன?

ஒருபுறம், ஏழை/எளிய மக்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்க அரசு கடமைப்பட்டுள்ளது. மறுபுறம்,
எளிதில் தொழில் செய்வதற்கான சீர்திருத்தங்களை நிறைவேற்றிய பொறுப்பும் அரசுக்கு உண்டு. எனவே, மரபு சாரா எரிசக்தி மூலம் மின்சார உற்பத்தியை அரசு துரிதப்படுத்த வேண்டும்.

மாநிலத்தின் சராசரி மின்தேவை 14,500 முதல் 15,500 MW வரை உள்ளது. இதற்காக 31,894 MW மின்சார திறன் நிறுவப்பட்டுள்ளது (Installed Capacity மட்டும் தான்). இதில் 15,779 MW மரபுசாரா எரிசக்தி நிறுவுத்திறன் ஆகும்.  2019 வருட சூரிய எரிசக்தி கொள்கை, 2023 ஆம் ஆண்டிற்குள் 9000 மெகாவாட் சூரிய சக்தி உற்பத்தியை இலக்காக கொண்டுள்ளது. எனவே, மரபு சாரா எரிசக்தி மூலம் மின்சாரத்தை தயாரிப்பதற்கான சூழலை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும்.     

மரபு சாரா எரிசக்தியில் தான் மக்கள் அரசியில் முழுமைபெறுகிறது: 

உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை எரிசக்திதுறை தான் தீர்மானித்து வருகிறது. இந்தோனேசிய, அரபுநாடுகள், ரஷியா, பொலிவியா உள்ளிட்ட நாடுகள் எரிசக்தி ஆதாரங்களை கண்டறிந்ததன் மூலம் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்தன. ஆனால், இது நீடித்த வளர்ச்சியில்லை இல்லை என்பதை புவி வெப்பமயமாதல் காட்டுகிறது.  

மேலும், தற்போதைய எரிசக்தித் துறை மக்களை நுகர்வோராக (Consumers) மட்டுமே பார்க்கிறது. ஆனால், மரபு சாரா எரிசக்தி துறையில் பொதுமக்கள் உற்பத்தியாளராகவும், நுகர்வோராகவும் உள்ளனர். எனவே, பல கோடி ரூபாய் திட்டங்கள் மூலமாக சூரிய ஆற்றலை பெறுவதற்கு பதிலாக, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய குறைந்த செலவிலான தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த வேண்டும் ( உதாரணமாக -  Residential Rooftop Solar Scheme). 

நிலக்கரியில் இருந்து சூரிய மின்சாரம் என்பது தொழில்நுட்பம் சார்ந்ததாக மட்டும் இல்லாமல் , சமூக, பொருளாதார மாற்றத்திற்கான அடிப்படையாகவே பார்க்கப்பட வேண்டும்.                

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Jasprit Bumrah:  பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
Jasprit Bumrah: பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
"ஒரு ராத்திரி மட்டும்! பிரபலங்கள் விரும்பும் புது வாழ்க்கை’’ ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் பகீர்
Teacher Death: ''சாப்பாடு கொண்டு வர்றாருன்னு நினைச்சோம்; சாகடிக்க வந்திருக்கார்''- ஆசிரியை ரமணி கொலை- நேரில் பார்த்தவர் பகீர்!
Teacher Death: ''சாப்பாடு கொண்டு வர்றாருன்னு நினைச்சோம்; சாகடிக்க வந்திருக்கார்''- ஆசிரியை ரமணி கொலை- நேரில் பார்த்தவர் பகீர்!
Embed widget