மார்ச் மாதத்திற்கு பிறகு மகாராஷ்ட்ராவில் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர், சட்டப்பூர்வ பாதுகாவலர்/தத்து பெற்றோரை இழந்த ஒவ்வொரு குழந்தையும் 18 வயது பூர்த்தி செய்தவுடன் மாதந்தோறும் உதவித்தொகையும், 23-வயதை எட்டும் போது 10 லட்சம் ரூபாயும், பஎம் கேர்ஸ் நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்றும், இலவச சுகாதார காப்பீட்டுத்திட்டத்தில் இணைக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
63-வது பிறந்தநாளில் ஹீரோ! கமர்ஷியல் சினிமாவின் ‛காக்டெயில்’ கே.எஸ்.ரவிக்குமார்!
முன்னதாக, கொரோனா காரணமாக உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளின் பெயரில் 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் குழந்தைகள் தங்குவதற்கு முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு இடம் வழங்கப்படும். பட்டப்படிப்பு வரையிலான கல்வி மற்றும் விடுதிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் தமிழக அரசே ஏற்கும். அரசு விடுதிகளில் தங்காமல் உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக மாதந்தோறும் 3,000 ரூபாய் உதவித்தொகை 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.
மார்ச் மாதத்திற்கு பிறகு மகாராஷ்ட்ராவில் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
மகாராஷ்ட்ராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 600 ஆக பதிவாகி உள்ளது. கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதிக்கு பின்னர் இதுவே அந்த மாநிலத்தில் பதிவாகியுள்ள குறைந்தபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆகும். அந்த மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 லட்சத்து 31 ஆயிரத்து 815 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 402 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், அந்த மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆயிரத்து 844 ஆக உயர்ந்துள்ளது.
தெலுங்கானாவில் ஊரடங்கு 10 நாட்கள் நீட்டிப்பு - முதல்வர் சந்திரசேகர்ராவ்
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி, ஹரியானா ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பொதுமுடக்கம் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். தெலுங்கானாவில் இன்றுடன் பொதுமுடக்கம் நிறைவடைய இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானாவில்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 28 ஆயிரத்து 864 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 689 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை புதிய உச்சமாக 493 ஆக அதிகரித்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவால் 23 ஆயிரத்து 754 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.