Surya : விபத்தில் உயிரிழந்த ரசிகர்.. சூர்யா கொடுத்த உறுதி.. கொண்டாடும் ரசிகர்கள்..
தோடு நாமக்கல் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற தலைவரிடம் குடும்பத்தின் தேவைகள் எதுவாக இருந்தாலும் எனக்கு தெரியப்படுத்துங்கள் என கூறியிருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் வெகு சில நடிகர்கள்தான் ரசிகர்களுடன் ஒரு நெருக்கமான அன்பை வெளிப்படுத்துவார்கள் . அவர்களில் ஒருவர்தான் நடிகர் சூர்யா. சூர்யாவிற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். அவ்வபோது அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்து அவர்களுக்கும் வேண்டிய உதவியை சூர்யா செய்வது வழக்கம். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சூர்யா ரசிகர் மன்ற நாமக்கல் மாவட்ட செயலாளர் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்திருக்கிறார். ஆனால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். 27 வயதாகும் ஜெகதீஷிற்கு மனைவியும் ஒரு மகளும் இருக்கின்றனர். இதனை கேள்விப்பட்ட நடிகர் சூர்யா , தனது ரசிகரின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். அந்த புகைப்படம் ட்விட்டர் வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Suriya Sivakumar Anna#namakkal
Anna paid his last respect Namakkal District Treasurer Jagadeesh,who died in an accedent a few days ago💔 our deepest condolences. @Suriya_offl#Suriya #EtharkkumThunindhavan #VaadiVaasal #suriyafans #suriyaism #Suriya41 pic.twitter.com/c9UI5KZTpF— SalemSFC Women's UNIT (@SalemwomensUnit) May 29, 2022
மேலும் மறைந்த ஜெகதீஷின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய சூர்யா ஜெகதீஷின் மனைவிக்கு வேலை வாங்கித் தருவதாகவும், ஜெகதீஷின் மகள் இனியாவின் படிப்பை முடிக்க உதவுவதாகவும் சூர்யா உறுதியளித்துள்ளார் அதோடு நாமக்கல் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற தலைவரிடம் குடும்பத்தின் தேவைகள் எதுவாக இருந்தாலும் எனக்கு தெரியப்படுத்துங்கள் என கூறியிருக்கிறார்.
View this post on Instagram
சூர்யா தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். முதலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் பாலாவுடன் கைக்கோர்க்கும் சூர்யா41 திரைப்படம். இந்த படத்தில் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனை , படம் கைவிடப்பட்டது என செய்திகள் வெளியானது. ஆனால் அதெல்லாம் வெறும் வதந்தியே என்பது போல சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்கும் என பாலாவுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதே சமயம் சிஎஸ் செல்லப்பாவின் நாவலை தழுவி எடுக்கப்படும் வாடிவாசல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.