Senthil Balaji:கிடைத்தது ஜாமீன்;471 நாட்களுக்கு பிறகு வெளியே வரும் செந்தில் பாலாஜி - நிபந்தனை என்ன?
Senthil Balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
வழக்குப் பின்னணி:
வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாகி அமல்லாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் தாமதம் தொடர்பாக வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 2011-1016 ஆம் ஆண்டு காலத்தில் செந்தில் பாலாஜி தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றிருப்பவதாகவும் பணம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏதும் தரவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. அமலாக்கத் துறை Enforcement Case Information Report (ECIR)-ன் படி 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை கைது செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை வழங்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்ப்பட்டது. அங்கு பிணை மனு தள்ளுபடி அவரது தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
ஜாமீன் வழங்கி உத்தரவு:
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மறுவிசாரணைக்கு வந்தது. வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவு முறையாக சமர்பிக்கப்பட்டு அதன் பின்னர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியே வருவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செந்தில் பாலாஜி கைதாகி ஒராண்டு மூன்று மாதங்கள் 11 நாட்கள் கழித்து சிறையை விட்டு வெளியே வர இருக்கிறார்.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கையில்,, “செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக விசாரணைக் குற்றவாளியாகவே இருந்ததால் அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் இருவர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும், வாரத்த்தில் இரண்டு தினங்கள் - திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளைக் கலைக்கக் கூடாது; வழக்கில் வாய்தா கேட்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது” என்றார்.
நிபந்தனைகள் பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை.