மேலும் அறிய

3 முறை நீட் பாஸாகியும் கல்லூரியில் சேர முடியாமல் தவித்த இருளர் இன மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர்

தந்தையின் மரணம், தாய்க்கும் முறையாக வேலை இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், அரசு மருத்துவக் கல்லூரிக்கு, கட்ட வேண்டிய பணம் கூட கட்ட முடியாத சூழலில் பூஜா இருந்து வந்துள்ளார்

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் வசிக்கும் இருளர் இனத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் அதே பகுதியில் வசிக்கும் தேவி என்பவரை கடந்த 25 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பூஜா, சுவாதி, கார்த்திக் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளன. கூடுவாஞ்சேரி பகுதியில் பார்த்தசாரதி வசித்து வந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த குடிசை புயலால் பாதிக்கப்பட்டதால் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள  வீட்டில் குடியேறி வசித்து வந்தார்.
 
3 முறை நீட் பாஸாகியும்  கல்லூரியில் சேர முடியாமல் தவித்த இருளர் இன மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர்
 
பார்த்தசாரதி கூலி வேலை மற்றும் திருவிழாக்காலங்களில் கரகம் அலங்காரம் செய்து தருவது உள்ளிட்ட கிடைக்கும் வேலைகளை செய்து தன்னுடைய குடும்பத்தை நடத்தி வந்தார். தொடர்ந்து குடும்பம் வறுமை சூழ்நிலையில் இருந்தாலும் குழந்தைகளை படிக்க வைத்தால் மட்டுமே முன்னேற்ற முடியும் என வைராக்கியத்துடன் இருந்து வந்துள்ளார். தொடர் வறுமைக்கு இடையில், தனது இரண்டு பெண் குழந்தைகளையும் தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். தனது கடைசி பையன்  கார்த்திக்கை மட்டும் அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பார்த்தசாரதியின் முதல், மகள் பூஜா 12ஆம் வகுப்பில் 963 மதிப்பெண் பெற்றுள்ளார். சிறு வயதிலிருந்தே மாணவி பூஜா மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்து வந்துள்ளார் . இதனை அடுத்து பூஜா நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இருந்ததும் அந்த வருடம் அவருக்கு, எந்த கல்லூரியிலும் சீட் கிடைக்கவில்லை. பூஜாவின் தந்தை பார்த்தசாரதி, நீ எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் தொடர்ந்து நீட் தேர்வுக்கு தயாராகி படிக்குமாறு உத்வேகம் அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் கூலி வேலை செய்து வந்த பார்த்தசாரதி உடல்நிலை குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து, குடும்பம்  மிகப்பெரிய வறுமையில் சிக்கியது .
 
3 முறை நீட் பாஸாகியும்  கல்லூரியில் சேர முடியாமல் தவித்த இருளர் இன மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர்
 
படித்தால் மட்டுமே தனது குடும்பம் அடுத்த நிலைக்குப் போகும் என்பதை உணர்ந்த பூஜா, மீண்டும் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய, 276 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். இந்த வருடம் பூஜாவிற்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது . தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், வறுமையின் காரணத்தினால், தனியார் கல்லூரியில் சேர முடியாமல் இருந்து உள்ளார்.  இருந்தும் விடாப்பிடியாக படித்து வந்த பூஜா தற்போது நடைபெற்ற நீட் தேர்வில், 334 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். இதனையடுத்து அவருக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கு சீட் கிடைத்துள்ளது. தந்தையின் மரணம், தாய்க்கும் முறையாக வேலை இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், அரசு மருத்துவக் கல்லூரிக்கு, கட்ட வேண்டிய பணம் கூட கட்ட முடியாத சூழலில் பூஜா இருந்து வந்துள்ளார்.
 
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் கவனத்திற்கு மாணவியின் வறுமை நிலை குறித்து எடுத்துக் கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் உடனடியாக மாணவியின் கல்விக்கு உதவ முன் வந்துள்ளார். இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், தொண்டு நிறுவன அமைப்பை தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட மாணவிக்கு அனைத்துவித உதவிகளை செய்ய வேண்டும் என்று நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார். சென்னையை சேர்ந்த சைல்ட் லைஃப் என்ற தொண்டு நிறுவனம், மாணவியின் இந்த ஆண்டிற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு,  தேவையான பணத்தை செலுத்தி உள்ளது. மாணவிக்கு உடனடியாக உதவி செய்த மாவட்ட ஆட்சியருக்கு மாணவி நன்றி தெரிவித்துக்கொண்டார். இது குறித்து மாணவி பூஜா கூறுகையில், மூன்று முறை நீட் தேர்வில் இதுவரை தேர்ச்சி பெற்று இருக்கிறேன். நான் தொடர்ந்து முயற்சி செய்வதற்கு என் தந்தை மற்றும் தாய் உறுதுணையாக இருந்தார்கள். உன்னால் படிக்க முடியும் நீ நிச்சயம் படிப்பாய், என அப்பா தொடர்ந்து ஊக்கமளித்து வந்தார். நான் இப்பொழுது  மருத்துவக்கல்லூரியில் சேரும்போது, என்னுடன் அப்பா உடன் இல்லாமலிருப்பது மன வருத்தம் அளிக்கிறது என கண்ணீருடன் தெரிவித்தார்.
 
3 முறை நீட் பாஸாகியும்  கல்லூரியில் சேர முடியாமல் தவித்த இருளர் இன மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர்
 
பார்த்தசாரதியின் இரண்டாவது மகளான சுவாதியும், இந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதியுள்ளார். நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தாலும் மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு அவருக்கு சீட் கிடைக்கவில்லை. தானும் தன்னுடைய அக்காவை போல, நிச்சயம் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து, மருத்துவர் ஆகுவது தான் தன்னுடைய கனவு என கூறுகிறார். ஏழை மாணவியின் கல்விக்கு உதவிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget