"தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால்...." - எச்சரிக்கை விடுத்த அமைச்சர்
தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
#BREAKING
— ABP Nadu (@abpnadu) August 12, 2022
தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..
போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 'ABP நாடு’ செய்தி நிறுவனத்திற்கு தகவல்
அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை கண்காணிக்க ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது : அமைச்சர் pic.twitter.com/jZhNZFwbni
வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 15 ஆம் தேதி) சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்றும் நிகழ்ச்சிகள் நடைப்பெறும்.
சுதந்திர தினம் வரும் திங்களன்று கொண்டாடப்படும் நிலையில், வரும் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் பொதுவிடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தொடர் விடுமுறை விடுக்கப்படும் நாட்களில் மாணவர்கள், வெளியூரில் வேலை புரிபவர் ஆகியோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதிகமான மக்கள் ஊருக்கு செல்வதால், அதற்கான இட வசதிகள் அரசு பேருந்துகளில் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், மக்கள் பலர் தனியார் பேருந்துகளில் பயணித்து தங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு செல்வர். இந்த சந்தர்பத்தினை பயன்படுத்திக்கொள்ளும் தனியார் ஆம்னி பேருந்துக்கள் அவர்களின் பேருந்து கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கட்டண உயர்வால் பல மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தொடர் விடுமுறையால் தனியார் பேருந்துகள் கட்டணங்களை உயர்த்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளை கண்காணிக்க போக்குவரத்து ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
இதுகுறித்து ஏபிபி நாடுவிற்கு அமைச்சர் சிவசங்கர் அளித்த சிறப்பு பேட்டியில், “தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்