மேலும் அறிய

"ஓபிசி உரிமையில் கை வைக்காதே" - ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் ஸ்டாலினின் மாஸ் அட்டாக்

குளறுபடிகள் இன்றி ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் ஓபிசி மக்களின் உரிமையைக் காப்பாற்றச் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தற்போது எடுக்கப்பட்டு வரும் #Census2027 கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தோரைக் கணக்கிட ‘open-ended format to record caste details without a pre-determined drop-down list or standardized menu’ முறையை ஒன்றிய அரசு பயன்படுத்தும் என்று வெளியாகியுள்ள அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஓபிசி பட்டியலில் இடம்பெற்றுள்ளவை வகுப்புகள்தானே தவிர, அவை சாதிகள் அல்ல என்று ஒன்றிய அரசு தரப்பில் தரப்பட்டுள்ள விளக்கம் ஏற்புடையது அல்ல!

மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றுள்ள சாதிகளின் பட்டியலைப் பெற்று, தொகுத்து, பதிவேற்றி, அதில் இடம்பெற்றுள்ள சாதிகளில் ஒன்றைத் தெரிவு செய்யும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கும் வழிமுறையே குழப்பங்களுக்கு இடம் தராது. மாறாக, பொதுமக்கள் கூறும் சாதியின் பெயரைப் பதிவேற்றுவது குழப்பங்களுக்கே வழிவகுக்கும்.

 

இதனால் இந்தியாவில் 46 இலட்சம் சாதிகள் இருப்பதாகக் குளறுபடியான கணக்கு வரும் என்ற ஆபத்தைச் சமூகநீதியில் அக்கறை கொண்ட பலரும் சுட்டிக்காட்டுவதை அரசு புறந்தள்ளிவிடக் கூடாது.

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் நோக்கமே பட்டியலினச் சமூக மக்களின் எண்ணிக்கையைப் போல, OBC மக்களின் உண்மையான எண்ணிக்கையையும் அவர்களது கல்வி, சமுதாய, பொருளாதார நிலைமையையும் அறிந்துகொள்வதுதான். அப்போதுதான் அவர்கள் அதிகாரம் பெறுவதற்கான இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை வகுக்கவும், அவர்தம் முன்னேற்றத்துக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டவும் அரசுகளால் இயலும். அப்படி இருக்கையில், ஒன்றிய, மாநில அரசுகளின் OBC சாதிகளின் பட்டியலை வைத்து, அதிலிருந்து மக்கள் சாதிப்பெயரைத் தேர்வு செய்யும் முறையைப் பின்பற்றினால்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் நோக்கம் நிறைவேறும்.

தற்போதைய முறையைத் தொடர்ந்தால், மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்காகச் செலவிடப்படும் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயும், இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் உழைப்பும் வீணடிக்கப்படும். இதனால் எந்தப் பயனும் இல்லை. இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக அமைந்துவிடும் ஆபத்தைப் புறந்தள்ளக் கூடாது.

பொருத்தமற்ற விளக்கங்களைக் கூறி, ஒரு தவறை நியாயப்படுத்தாமல், குளறுபடிகளுக்கு இடம் தராமல், சாதிவாரிக் கணக்கெடுப்பின் உண்மையான நோக்கம் நிறைவேறுவதற்கான திருத்த நடவடிக்கைகளை உடனடியாக ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்து, நீதி வழங்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி, உரிய அழுத்தத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்க்கையை சீரழித்த குடி" பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவனுக்கு நேர்ந்த சோகம்
கல்லில் புதைந்த வரலாறு... ஆதிவாலீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு பிரதியெடுக்கும் பயிற்சி!
கல்லில் புதைந்த வரலாறு... ஆதிவாலீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு பிரதியெடுக்கும் பயிற்சி!
"எம்.எல்.ஏ கேட்டதும் தர்றீங்க" செவிலியர்களுக்கு ஏன் இல்ல ? போராட்டத்தில் இறங்கிய நடிகை கஸ்தூரி
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் விடுதலை: அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரம்!
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் விடுதலை: அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget