மேலும் அறிய

Kia Hybrid Cars: மைலேஜை ஏத்தி, செலவை குறைக்கிறோம்..! டக்கரா 5 ஹைப்ரிட்கள் - கியாவின் பட்ஜெட் டூ 7 சீட்டர் வரை

Upcoming Kia Hybrid Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பட்ஜெட் தொடங்கி ப்ரீமியம் 7 சீட்டர் வரை, 5 ஹைப்ரிட் கார் மாடல்களை அடுத்தடுத்து சந்தைப்படுத்த கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Upcoming Kia Hybrid Cars: கியா நிறுவனம் அடுத்தடுத்து சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ள,5 ஹைப்ரிட் கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

கியாவின் ஹைப்ரிட் கார்களுக்கான திட்டம்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹைப்ரிட் கார் மாடல்கள் மீது, கியா நிறுவனம் மிகப்பெரிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அதன்படி, நிறுவனத்தின் லைன் - அப்பில் உள்ள டீசல் கார் மாடல்களை ஹைப்ரிட் எடிஷன்களாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் நீங்கள் கியா கார் மாடல்களை விரும்புபவராக இருந்து, ப்ராண்டின் எந்த கார் மாடல் அடுத்ததாக ஹைப்ரிட் எடிஷனாக சந்தைப்படுத்தப்பட உள்ளது என அறிய விரும்புகிறீர்களா? எனில் உங்களுக்கான சரியான இடத்தை நீங்கள் அடைந்து இருக்கிறீர்கள். அந்த வகையில் கியா நிறுவனம் சார்பில் அடுத்தடுத்து அறிமுகமாக உள ஹைப்ரிட் எஸ்யுவி மற்றும் எம்பிவி கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

கியாவின் எதிர்பார்க்கப்படும் 5 ஹைப்ரிட் கார்கள்:

1. கியா சோனெட் ஹைப்ரிட் - சிறிய எஸ்யுவி, பெரிய செயல்திறன்

அடுத்த தலைமுறை கியா சோனெட் இந்திய சந்தையில் 2027ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெளியாகியுள்ள தகவலின்படி, இந்த காரின் ஹைப்ரிட் எடிஷனை 2028 அல்லது 2029ம் ஆண்டில் கொண்டுவர தென்கொரிய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். ஹைப்ரிட் பவர்ட்ரெயின் ஆப்ஷனை பெறக்கூடிய உள்ளூரில் தயாரிக்கப்படும் நிறுவனத்தின் மாடல்களில் மிகவும் முக்கியமான மாடல்களில் ஒன்றாக சோனெட் இருப்பதாக நிறுவனமே தெரிவித்துள்ளது. இதுதொடர்பான தொழில்நுட்ப விவரங்கள் ஏதும் வெளியாகாவிட்டாலும், இந்த பிரபலமான சப்-காம்பேக்ட் எஸ்யுவிக்கான வலுவான ஹைப்ரிட் சிஸ்டத்தை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் விலை சுமார் 10 லட்சம் முதல் 16 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்.

2. கியா செல்டோஸ் - ப்ராண்டின் முக்கிய மாடல்

2027-ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் செல்டோஸ் ஹைப்ரிட், கியாவின் தயாரிப்பு வரிசையில் மிக முக்கியமான புதிய வரவுகளில் ஒன்றாக இருக்கும். தற்போதைய சர்வதேச செல்டோஸ் ஹைப்ரிட், 1.6-லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்துகிறது. இந்திய எடிஷனில் தற்போதுள்ள 1.5-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின், ஹைப்ரிட் அமைப்புக்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  செல்டோஸ் ஹைப்ரிட் எரிபொருள் சிக்கனத்தில் கவனம் செலுத்தி,லிட்டருக்கு சுமார் 25 கி.மீ மைலேஜை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மாடல் ஆல்-வீல் டிரைவ் (AWD) வசதியை கொண்டிருந்தாலும், இந்திய எடிஷனில் இடம்பெறுவது சந்தேகமே. இதன் விலை சுமார் 18 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்.

3. கியா கேரன்ஸ் ஹைப்ரிட் - குடும்பத்திற்கான எம்பிவி

குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்றதாக கூறப்படும் கேரன்ஸ் மாடல்களும் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தைப் பெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறை கேரன்ஸ், 2029-ஆம் ஆண்டுக்குள் ஹைப்ரிட் பவர்டிரெய்னைப் பெறுமாம். வரவிருக்கும் இந்த ஹைப்ரிட், 1.5-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன், ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரி பேக் ஆகியவற்றை இணைத்துப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான மேனுவல் கியர்பாக்ஸிற்குப் பதிலாக பிரத்யேக ஹைப்ரிட் ட்ரான்ஸ்மிஷன் அல்லது இ-சிவிடி-யைப் பயன்படுத்தக்கூடும். ஹைப்ரிட் சிஸ்டம், கேபின் அல்லது பூட் ஸ்பேஸை அதிகமாக எடுத்துக்கொள்ளாத வகையில், பேட்டரி பேக்கேஜிங்கிலும் கியா கவனம் செலுத்தும் எனவும்,  நெகிழ்வான 6 மற்றும் 7 இருக்கை உள்ளமைப்புகளும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சுமார் 15 லட்சம் முதல் 19 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்.

இதையும் படியுங்கள்: Maruti Baleno: 30KM மைலேஜ் - லெவல் 2 ADAS, வெண்டிலேடட் இருக்கைகள், களைகட்டும் ப்ரீமியம் கார் - விலை, வசதிகள் எப்படி?

4. கியா கேரென்ஸ் க்ளாவிஸ் - அடுத்த தலைமுறை எம்பிவி

2029-ஆம் ஆண்டுக்குள் வெளிவரவிருக்கும் கேரன்ஸ் க்ளாவிஸின் அடுத்த தலைமுறை மாடலில் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் இடம்பெறும் என்பதை கியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. தற்போதைய மாடலில் ஏற்கனவே பெட்ரோல், டர்போ-பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் பவர்ட்ரெய்ன்கள் உள்ளன. அதோடு வலுவான ஹைப்ரிட் அம்சம் சேர்க்கப்படுவது, வாங்குபவர்களுக்கு எரிபொருள் செலவை குறைப்பதற்கான மற்றொரு தேர்வை வழங்கும். 1.5-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் இந்த அமைப்பின் அடிப்படையாக அமையக்கூடும்.  இந்த அடுத்த தலைமுறை MPV, ஒரு புதிய எலெக்ட்ரிக்கல் கட்டமைப்பையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5. கியா கார்னிவல் ஹைப்ரிட்

பட்டியலில் கடைசியாக இருந்தாலும், இந்தியாவில் அடுத்ததாக கியா சார்பில் அறிமுகமாக உள்ள ப்ராண்டின் ஹைப்ரிட்டாக கார்னிவல் பிரீமியம் MPV உள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள கார்னிவல் ஹைப்ரிட், சர்வதேச மாடலைப் போலவே 1.6-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினைப் பெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய கார்னிவல் ஹைப்ரிட், ஒருங்கிணைந்த 242 bhp மற்றும் 367 Nm ஆற்றலை உற்பத்தி செய்வதுடன், ஃபிரண்ட்-வீல் டிரைவ் உடன் 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைப் பயன்படுத்துகிறது. கார்னிவலின் மற்ற வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் பிற சிறப்பம்சங்கள் அப்படியே இருக்கும். உள்ளூரில் இதன் விலை சுமார் 62 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Ventilated Seat Cars: குளுகுளுன்னு போகணுமா..! லோ பட்ஜெட்டில் வெண்டிலேடட் இருக்கைகள் - 5 ஸ்டார் ரேட்டிங், 34KM மைலேஜ்
குளுகுளுன்னு போகணுமா..! லோ பட்ஜெட்டில் வெண்டிலேடட் இருக்கைகள் - 5 ஸ்டார் ரேட்டிங், 34KM மைலேஜ்
Honda Elevate Facelift New Look: யப்பா, லுக்கு அள்ளுதே.! புத்தம்புது தோற்ற வடிவமைப்பில் வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்
யப்பா, லுக்கு அள்ளுதே.! புத்தம்புது தோற்ற வடிவமைப்பில் வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்
Skoda Slavia Facelift Review: கண்கவர் அழகு.! ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் எப்படி இருக்கு.? என்னென்ன மாற்றங்கள்.? இதோ ரிவ்யூவ்
கண்கவர் அழகு.! ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் எப்படி இருக்கு.? என்னென்ன மாற்றங்கள்.? இதோ ரிவ்யூவ்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget