இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்.. ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை. நேற்று அனுமதி சீட்டு பெற்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படை கைது செய்து, ஒரு படகையும் கைப்பற்றியுள்ளது.
இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்:
தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேர் ஒரு படகுடன் கைது: இலங்கை கடற்படை நடவடிக்கை
ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து நேற்று சனிக்கிழமை காலை 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2ஆயிரத்துற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் கைது:
ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து விட்டு இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் மீன் பிடித்துவிட்டு கரை திரும்பி கொண்டிருந்த போது வடக்கு மன்னார் கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 8 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மீனவர்களிடம் முதற்கட்ட விசாரணைகள் முடிந்த பின்னர் மீனவர்கள் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .
சமீபத்தில், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இது தொடர்பாக, கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய இணை அமைச்சர் முரளிதரனை நேரில் சந்தித்து வழங்கினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடந்து கைது செய்யப்படுவதை நிறுத்திடவும் கைது செய்யப்படுள்ள மீனவர்களை உடனடியான விடுவிக்கவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகுகளை திரும்ப வழங்கிவும் வலியுறுத்தியும் மத்திய வெளியுறுவுத் துறை இணையமைச்சர் வி. முரளிதரனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்தப் பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண மத்திய அரசு விரைந்து நடவடிக்கை என்றும் வலியுறுத்தியிருந்தார்.






















