விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் இருமடங்காக உயர்வு - தமிழக அரசு ஆணை
விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் முன்பு 3000 ரூபாயாக இருந்து வந்தது.
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களை சிறப்பிக்கும் வகையில், போட்டித்தேர்வுகளில் போனஸ் மதிப்பெண்கள், விருதுகள், சர்வதேசப் போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்டவைகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுத்தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்
இரண்டு மடங்காக உயர்வு
அந்த வகையில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 3000 ரூபாயிலிருந்து இருந்து 6000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முன்னதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் அதேபோல் தற்போது விளையாட்டு வீரர்களுக்கான வழங்கப்படும் ஓய்வூதியத்தை 3000 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும் படிக்க: போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்
எங்கு விண்ணப்பிக்கலாம்...
விளையாட்டு துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு இந்த ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியத் தொகையைப் பெற www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த ஓய்வூதியத்தைப் பெற சர்வதேச அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். இதில் முதல் மூன்று இடங்களுக்குள் பிடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மூத்தோர் போட்டிகள் மற்றும் அழைப்பு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற முடியாது.
மேலும் படிக்க: OPS Statement : "நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அதிகளவில் வெளிமாநில பொறியாளர்கள்"..! ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்..!
இலங்கையின் ஆட்சி கவிழ்ப்பு முன்னரே தெரியும்; கோத்தபயவுக்கு இந்தியா விசா மறுத்தது உண்மை - பரபரப்பை கிளப்பும் கீர்த்தி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்