மேலும் அறிய

Minister Udayanidhi Stalin : டெங்கு, கொரோனாவை போன்று சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி..

கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம் என்று சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுக கழக இளைஞர் அணிச் செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றார்.  

அப்போது அவர் பேசியதாவது: “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. `சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் `சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.

கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம் ஆகும். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்.

சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் வேறு ஒன்றும் கிடையாது. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது அதாவது மாற்ற முடியாதது.

யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும்.

நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இது நூற்றாண்டு. வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்களுக்கு இது 200வது ஆண்டு. தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் நடந்த வைக்கம் போராட்டத்திற்கும் இது நூற்றாண்டு. அதேபோல் தமிழ்நாட்டு மக்களுடைய உரிமைகளை வென்றெடுக்கத் தோன்றிய திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இது பவள விழா ஆண்டு. இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற ஆண்டாக இந்த ஆண்டு இருக்கின்றது.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, சிறப்பாக நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் இருக்கும்போது கூட ஸ்கூலில் கலையில் உணவு போடுவதால், ஸ்கூல் கழிப்பறை, கக்கூஸ் நிரம்பி வழியுது என்று ஒரு பேப்பரில் செய்தி போடுகிறார்கள்.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உடனே சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு போட்டார்கள். நிலாவுக்குச் சந்திராயன் விடுற இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படிச் செய்தி போடுகிறதென்றால், நூறு ஆண்டுகளுக்கு முன்னே என்ன ஆட்டம் போட்டிருப்பார்கள் என அந்த ட்விட்டர் பதிவில் பதிவிட்டிருந்தார்கள்.

நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் அவருடைய `நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தில் எழுதி இருக்கிறார். அவருடைய அப்பா முத்துவேல் தாத்தா அவர்கள் கலைஞருடைய ஐந்தாவது வயதில் பள்ளிக்கூடக் கல்வியுடன் சேர்த்து இசைக்கல்வியும் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார்கள். ஆனால், இசையைப் பள்ளியில் சேர்ந்து கற்றுக்கொள்வதற்கு கலைஞர் அவர்களுக்கு ஈடுபாடும் இல்லை. ஆர்வமும் இல்லை. அதற்கான காரணத்தையும் அவர் அந்த `நெஞ்சுக்கு நீதி’ நூலில் தெரிவித்திருக்கிறார்.

என்ன காரணம் என்றால், இசைக் கல்வி கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், பயிற்சிக்கு சட்டை போட்டுக் கொண்டு போகக்கூடாது. துண்டை இடுப்பில் தான் கட்டிக்கொண்டு போகவேண்டும். காலில் செருப்புப் போடக்கூடாது. இப்படிச் சாதி மத சாஸ்திர சம்பிரதாயம் என்பதன் பெயரால் நடத்தப்படும் கொடுமையை என்னடைய பிஞ்சு மனம் வன்மையாக எதிர்க்கக் கிளம்பியதுதான், நான் இசைக் கல்வி கற்க தனக்கு ஆர்வம் ஏற்படவில்லை” என கலைஞர் தெரிவித்திருக்கிறார்.

அந்த வயதில் கலைஞரின் பிஞ்சு மனதில் சனாதனத்திற்கு எதிராக எரிமலை வெடித்துள்ளது. அதனால்தான் தன்னுடைய ஐந்து வயதில் ஆரம்பித்த அந்தப் போராட்டம், 95 வயது வரைக்கும் கலைஞர் அவர்கள் சனாதனத்தை  எதிர்த்து பெரும் போரை நடத்தியுள்ளார்கள்.

கலைஞரின் எழுத்துகள்:

தமிழ்நாட்டில் மாற்றக்கூடாது என்று எதுவுமே இல்லையென்று எல்லாத்தையும் மாற்றிக் காட்டியவர்தான் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். சினிமாவில் சமஸ்கிருதம் கலந்த தமிழ் வசனங்களைப் பேசிக்கொண்டிருந்தபோது, கலைஞர் அவர்கள் தான் தன்னுடைய பேனாவை ஈட்டியாக்கி, `எந்தக் காலத்திலடா அம்பாள்  பேசினாள்’ என `பராசக்தி’  திரைப்படத்தில் என்று வசனம் வைத்தார்.

இங்குகூடி இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். தொடக்கத்தில், கலைஞரும் எழுத்துக்களும் சனாதன கருத்துக்களைத் திணிக்கத்தான் பயன்படுத்தப்பட்டு வந்தன. திராவிட இயக்கமும், நம்முடைய கம்யூனிச இயக்கமும் தோன்றிய பிறகுதான் கலையும், எழுத்தும் உழைக்கின்ற மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக மாறின.

முன்பெல்லாம், இங்கு இராமயணமும், மகாபாரதமும்தான் மக்களுக்கான கலையாகவும், எழுத்தாகவும் பேசப்பட்டு வந்தன. திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும் வந்த பிறகுதான் மக்களுக்கு, `திருக்குறள்’, `சிலப்பதிகாரம்’, `மணிமேகலை’ எல்லாம் சமுகத்தில் பேசு பொருளாக பேசப்பட்டன. கலைஞர் அவர்கள் `குறளோவியம்’ எழுதினார். `பூம்புகார்’ என்ற திரைப்படத்தின் கதை வசனம் வாயிலாக சிலப்பதிகாரத்தின் கதையைச் சொன்னார்.

மனிதர்கள் யாரும் பசியால் வாடக்கூடாது என்றுதான் வள்ளலார், வடலூரில் அணையா அடுப்பைப் பற்ற வைத்தார். வள்ளலார், அன்றைக்குப் பற்ற வைத்த அந்த அடுப்பு இன்னமும் அணையாமல் எரிந்து கொண்டு இருக்கிறது.

வள்ளலார் ஏற்றிய அந்த அடுப்பிலிருந்து நெருப்பை எடுத்துத்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்களில் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் அடுப்பைப் பற்ற வைத்திருக்கிறார்.இன்றைக்கு 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 17 இலட்சம் மாணவர்கள் இந்தக் காலை உணவுத் திட்டத்தால் பயனடைந்து வருகிறார்கள்.

நானும் ஒரு பயனாளிதான். நான் எந்த ஊருக்கு, எந்த மாவட்டத்திற்குச் சுற்றுப்பயணம் சென்றாலும், காலை 8 மணிக்கு முதல் வேலை அந்த மாணவர்களோடு போய் உட்கார்ந்து உணவு சாப்பிடுவதுதான்.

இதில் இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. உங்களுக்குத் தெரியும் எப்போதும் உணவில் மிக மிக முக்கியமான உணவு காலையில் சாப்பிடுகின்ற உணவுதான். அதுமட்டுமில்லாமல், நான் அங்கே சென்று சாப்பிடும்போது அந்தக் குழந்தைகளுடன் உட்கார்ந்து பேசி, சாப்பாடு நல்லா இருக்கா, தினமும் நேரத்திற்குத் தருகிறார்களா, கொடுக்கின்ற உணவு தரமாக இருக்கிறதா, சுவையாக இருக்கிறதா  என்றும் ஆய்வு மேற்கொள்வேன்.

அதேநேரத்தில் இன்னொரு வேலை, அந்த ஆசிரியர்களையெல்லாம் அழைத்து, வருகைப் பதிவேடு இதுவரைக்கும் எத்தனை மாணவர்கள் வந்தார்கள். இந்தத் திட்டத்துக்கு அப்புறம் எத்தனை மாணவர்கள் வருகிறார்கள். ரொம்ப நாள் பள்ளிக்கூடத்திற்கு வராத மாணவர்களுக்கெல்லாம் இந்தத் திட்டத்தைக் கொண்டு சேர்த்தீர்களா அவர்கள் எல்லாம் வருகிறார்களா? என்ற அந்த ஆய்வையும் நான் மேற்கொண்டு வருகின்றேன்.

மக்களை ஜாதிகளாகப் பிரித்து தனித்தனியாக இருக்கவேண்டும் என்று சொன்னதுதான் சனாதனம். ஆனால், கலைஞர் அவர்களோ எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி அமர்த்தி அந்த இடத்திற்கு, `சமத்துவபுரம்’ என்று பெயர் வைத்து சனாதனத்திற்குச் சம்மட்டி  அடி கொடுத்தவர்தான் நம்முடைய கலைஞர் அவர்கள்.

இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த சனாதனத்தின் அடிமைகள் பத்து ஆண்டுகளாக சமத்துவபுரங்களைப் பராமரிக்கவே இல்லை. நம்முடைய ஆட்சி அமைந்த இந்த இரண்டு ஆண்டுகளில் சமத்துவபுரங்களைப் பராமரிப்பதற்கு ஒரு வீட்டிற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி, அதேபோல் புதுப்பிப்பதற்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்கி, சமத்துவப்புரங்களைப் புதுப்பித்திருக்கிறார் நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய முதலமைச்சர் அவர்கள்.

நம்முடைய கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்குக் கோயில்களில் அர்ச்சகராகப் பணியாற்ற ஆணை வழங்கினார்கள். இதுதான் திராவிட மாடல்.

நான் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சராகவும்தான் நான் இந்த நேரத்திலே இங்கு வந்திருக்கிறேன். வீட்டுப் படிக்கட்டைக்கூடத் தாண்டக்கூடாது என பெண்களைச் சனாதனம் அடிமைப்படுத்தி வைத்தது. ஆனால், இன்றைக்கு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகளில் பெண்கள் கலந்து கொண்டு சாதனை படைத்து வருகிறார்கள்.

இவையெல்லாம் நமக்கு எவ்வளவு பெருமையாக இருக்கின்றது. நாம் கொண்டாடுகின்றோம். இன்றைக்குப் பெண்களில் நிறைய பேர் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலமாக கடன் பெற்று தொழில் செய்து பொருளாதாரத்துக்கு கணவனை எதிர்பார்க்காத ஒரு நிலைமையில் இருக்கின்றார்கள்.

பெண்களுக்கு சனாதனம் என்ன செய்தது..?

பெண்களுக்கு சனாதனம் என்ன செய்தது. கணவனை இழந்த பெண்களை நெருப்பில் தள்ளி, உடன்கட்டை ஏற வைத்தது. கைம்பெண்களுக்கு மொட்டை போட்டு வெள்ளைப் புடவை கட்ட வைத்ததுதான் சனாதனம். குழந்தைத் திருமணங்கள் நடந்தன. இதுதான் பெண்களுக்கு சனாதனம் செய்தது. ஆனால், பெண்களுக்கு திராவிடம் என்ன செய்தது? பெண்களுக்குக் கட்டணம் இல்லா பேருந்து வசதியை செய்து கொடுத்தது. கல்லூரியில் படிக்கின்ற பெண்களுக்குப் புதுமைப்பெண் திட்டம் மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை.

வருகிற, செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பிறந்தநாளில் பெண்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய ’கலைஞர் பெண்கள் உரிமை திட்டம்’.

மக்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களைத் திராவிட மாடல் அரசு நிறைவேற்றுகின்றது. மத்திய அரசு மக்களைப் பின்னோக்கி, பின்னால் தள்ள பார்க்கின்றது.

மணிப்பூர் மாநிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலம் அங்கு சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து, கலவரத்தைத் தூண்டி விட்டிருக்கிறார்கள் கலவரத்தை மூட்டி விட்டிருக்கிறார்கள் இதுதான் சனாதனம் கடந்த ஐந்து மாதங்களாக அந்தக் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது.  200க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், இங்கே சனாதனத்திற்கும் திராவிடர் மாடலுக்குமான வித்தியாசம் உங்களுக்கே தெரியும்.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மணிப்பூர் மாநிலத்தில் நிறைய விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களுக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அழைப்பு விடுத்தார்கள்.

 உங்களால் விளையாட்டுப் பயிற்சி எடுப்பதற்கு உரிய பாதுகாப்பான சூழ்நிலை அங்கு இல்லை என்றால், நம்முடைய மாநிலத்துக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார்கள் அவரது அழைப்பை ஏற்று மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 18 விளையாட்டு வீரர்கள் `பென்சிங்’ `வாள் வீச்சு’ வீரர்கள் இங்கு வந்து கிட்டத்தட்ட 20 நாட்களாக, இங்கு தங்கி அவர்கள், அவர்களுடைய பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அவர்களுக்குரிய அத்தனை வசதிகளும், போக்குவரத்து வசதி, உணவு வசதி, தங்குமிட வசதி ஆகியவை அனைத்தும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

எங்கள் மாநிலத்தில்கூட இப்படி எங்களைப் பார்த்துக் கொள்ளவில்லை என்று அத்தனை விளையாட்டு வீரர்களும் நம்முடைய முதலமைச்சர் அவர்களை வாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

கலவரத்தைத் தூண்டுவதுதான் சனாதனம்:

பொய்ச் செய்தி பரப்புவது. கலவரத்தைத் தூண்டுவதுதான் சனாதனம்.சில மாதங்களுக்கு முன்பு நம்முடைய வட மாநிலத் தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற ஒரு பொய்ச் செய்தியைப் பரப்பினார்கள். ஆனால், அதை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மிகச்சிறப்பாகக் கையாண்டார்கள்.

நம்முடைய அதிகாரிகள் பிஹார் சென்றார்கள். அங்கிருந்த அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்தார்கள். தவறாக எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று சொன்னார்கள்.

 பாசிஸ்ட்டுகளின் அந்தப் பொய்ச் செய்தியைச் சுக்குநூறாக நொறுக்கினார் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இப்போது கூடப் பாருங்கள். பல்வேறு தொழில்களில் இருக்ககூடிய கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கின்றோம் என்று சொல்லி, ஒன்றிய அரசு விஸ்வகர்மா என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்.

ஆனால் அதில் ஒரு சதி இருக்கு. கைவினைக்கலைஞர்கள் குடும்பங்களில் இருக்கக்கூடிய அடுத்தத் தலைமுறை பிள்ளைகளுக்கும் இந்தத் திட்டத்தில் பயிற்சி கொடுக்கப் போறார்களாம்.

இதைத்தான் குலக்கல்வித் திட்டம் என்று 1953- ஆம் ஆண்டு ராஜகோபாலச்சாரி இங்கு கொண்டு வந்தார். தந்தை பெரியார் இந்தத் திட்டத்தை எதிர்த்துக் கடுமையான போராட்டங்களை அறிவித்தார். அதனால்தான், ராஜகோபாலச்சாரியார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுகின்ற நிலை வந்தது.

பின்னர், முதலமைச்சரான காமராஜர் அவர்கள் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார். அந்தக் காமராஜருடைய பெயரில் இருக்கக்கூடிய அரங்கத்தில்தான் இன்றைக்கு இந்த மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.இந்த காமராஜர் அரங்கத்தில் இருந்து நாம் அத்தனைப்பேரும் உரிமையோடு, உறுதியாகச் சொல்வோம். ஒன்றிய அரசு கொண்டு வருகின்ற `விஸ்வகர்மா’ திட்டத்தை நம்முடைய மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்க்கும்.

எப்படி குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த ராஜாஜி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினாரோ, அதே மாதிரி இந்த விஸ்வகர்மா திட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்ற நரேந்திர மோடி அவர்கள் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைவார்.

நாம் நம்ம குழந்தைங்களைப் படிக்க வைப்பதற்காக, யோசிச்சு திட்டங்களைக் கொண்டு வருகின்றோம். ஆனால், பாசிஸ்ட்டுகள் நம்ம குழந்தைங்களைப் படிக்கவிடாமல் செய்வதற்கு என்ன வழின்னு யோசிச்சு அதற்கான திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். ஏனென்றால், நாமெல்லாம் படிச்சிடக் கூடாதுங்கிறதுதான் சனாதன கொள்கை.

நீட் தேர்வு ரத்து:

அதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் நீட் தேர்வு. 2017 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது நீட் தேர்வு. இதுவரைக்கும் அரியலூர் அனிதாவில் ஆரம்பித்து, இப்போது குரோம்பேட்டை ஜெகதீஷ் வரைக்கும் 21 குழந்தைகளை நாம் பறிக்கொடுத்திருக்கிறோம்.

நாம் மருத்துவக் கட்டமைப்பில் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக இருக்கின்றோம். தமிழ்நாட்டை என்ன சொல்வார்கள்,`இன்டியாஸ் மெடிக்கல் ஹப்’ என்பார்கள். இதுவரைக்கும் இந்தியாவில் இருக்கக்கூடிய மிகச் சிறந்த மருத்துவர்களை உருவாக்கியதுதான் நம்முடைய தமிழ்நாடு. ஆனால், அதைச் சிதைக்க வேண்டும் என்று கொண்டுவரப்பட்டதுதான் இந்த நீட் தேர்வு.

நாம் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். கடந்த 20- ஆம் தேதி மிகப்பெரிய உண்ணாவிரத அறப்போராட்டத்தை, நீட் தேர்வை ரத்துச் செய்யக்கோரி ஆளுநரைக் கண்டித்து, மிகப்பெரிய ஒரு உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தினோம்.

எல்லாரும் சொல்கிறார்கள். நீட் தேர்வு போராட்டம் மிகப்பெரிய வெற்றி, வெற்றி என்று. ஆமாம், நம்முடைய எதிர்ப்பைத் தெரிவித்த விதத்தில் வெற்றி அடைந்திருக்கிறோம். ஆனால், உண்மையான வெற்றி எப்போது, என்றைக்கு நீட் தேர்வை முழுமையாக தமிழ்நாட்டிலிருந்து ரத்து செய்யப்படுகிறதோ அப்போதுதான் நமக்கு வெற்றி.

தேர்தல் காலத்தில், பிரச்சாரத்தில் நான் வாக்குறுதி கொடுத்தேன். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் அதற்கான முழு முயற்சிகள் எடுக்கப்படும் என்று நான் சொன்னேன்.

அதற்காக உண்மையாக நானும், நம்முடைய திராவிட மாடல் அரசும், முதலமைச்சரும்  முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். இந்த நீட் தேர்வை ரத்துச் செய்ய வேண்டுமென்றால் இந்த ஒரு உதயநிதி போதாது. நீங்கள் ஒவ்வொருத்தரும், தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருத்தரும், மாணவர்கள் ஒவ்வொருத்தரும், இளைஞர்கள் ஒவ்வொருத்தரும் உதயநிதியாக மாறி அந்த நீட் தேர்வு போராட்டத்திலே உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

 எப்பொழுது நீட் தேர்வு ரத்து செய்யப்படுகிறதோ, அப்போதுதான் உண்மையான மாணவர்களுக்கான வெற்றி. மாநில சுயாட்சிக்கான அந்த வெற்றி. இப்படி சனாதனத்துக்கும் திராவிடத்துக்குமான போர் உச்சத்திலே நடந்துக்கிட்டு இருக்கிற இந்தச் சூழலில்தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சனாதன ஒழிப்பு மாநாட்டை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்.

இது மிக மிக அவசியமான மாநாடு. நீங்கள் இந்த மாநாட்டை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். அது பத்தாது, இந்த மாநாட்டை ஆண்டு முழுவதும் எப்பொழுதெல்லாம் முடியுமோ, அப்பொழுதெல்லாம் நடத்த வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கின்றேன். இந்த மாநாட்டைப் பார்க்கின்றபோது சனாதனவாதிகளுக்கு சிலருக்கு நிச்சயம் வயித்தெரிச்சல் இருக்கும்.

அவர்களுக்கு முடிந்தவரை எரியட்டும். இந்த மாநாடுகளை நீங்கள் தொடர்ச்சியாக நடத்த வேண்டும். இன்றைக்கு இந்த மாநாடு இன்று காலை 08.30 மணியளவில் ஆரம்பித்து, இன்று ஒருநாள் முழுவதும் நடைபெறுகிறது.

சனாதனத்துக்கு எதிரான தலைப்புகளில் பலர் இங்குப் பேச இருக்கிறார்கள். இதில் கலந்துகொண்டிருக்கிற எல்லாருக்கும் எனது பாராட்டுகளையும், என்னுடைய வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இங்கே பேசிவிட்டு நாம் அப்படியே கலைந்து விடக்கூடாது. இங்கு பேசப்பட்ட விஷயங்களை, கருத்துக்களை எல்லாம் நாம் அனைவரும் பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

 நான் மட்டும் பெரியாரையும் – அண்ணாவையும் பார்க்காமல் இருந்திருந்தால், ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்திருப்பேன் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களே சொல்லியிருக்கிறார்.

கலைஞர் அதை வெறும் பேச்சுக்காகச் சொல்லவில்லை. தொழிலாளர் வர்க்கத்தை உள்ளன்போடு நேசித்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். அதனால்தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவரான ஸ்டாலின் அவர்களின் பெயரை, தன்னுடைய மகனுக்குப் பெயராகச் சூட்டி பெருமை சேர்த்தார், மகிழ்ச்சி அடைந்தார்.


Minister Udayanidhi Stalin : டெங்கு, கொரோனாவை போன்று சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி..

 

அதுமட்டுமல்ல, மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையைத் தந்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். அப்படிப்பட்ட இடதுசாரித் தோழர்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்று அதில் உரையாற்றியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

இங்கே நம்முடைய மருத்துவர்.எழிலன் அவர்கள் சொன்னார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இளைஞர் அணியின் சார்பாக பயிற்சி பாசறைக் கூட்டம், திராவிட இயக்க வரலாறு, மொழிப்போர் வரலாறு இதையெல்லாம் நம்முடைய இளைஞர் அணியின் சார்பாகத் தொகுதி வாரியாக நடத்தி முடித்துள்ளோம்.

நம் தலைவர் அவர்கள் எங்களுக்கு ஆணையிட்டிருக்கிறார்கள். தொகுதி வாரியாகப் பணியை முடித்து விட்டீர்கள். அடுத்து ஒன்றிய வாரியாகப் பயிற்சி பாசறை 2.0 இதை விரைவில் தலைவருடைய ஆணைக்கேற்ப நடத்த உள்ளம். அதிலே நம்முடைய கம்யூனிட் இயக்கத்தைச் சார்ந்த தோழர்களான நீங்களெல்லாம் பங்குபெற்று உங்களுடைய கருத்துக்களையெல்லாம் நீங்கள் பறிமாறிக் கொள்ள வேண்டும் என்று நான் இந்த நேரத்திலே வேண்டுகோள் வைக்கின்றேன்.

இப்போது நாம் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இரண்டு நாட்கள் நேற்று, நேற்று முன்தினம் மும்பையிலே நடந்த இந்தியா கூட்டணித் தலைவர்கள் கூட்டத்திலே கலந்துகொண்டுவிட்டு இப்போதுதான் திரும்பி இருக்கிறார்கள்.

சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. எனவே, நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய கரத்தை வலுப்படுத்த கூடிய வகையிலே அனைவரும் ஒன்று சேர்ந்து `இந்தியா கூட்டணி’யின் வெற்றிக்கு நாம் அனைவரும் உழைப்போம், பாடுபடுவோம்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் வெல்வோம் என்று உறுதி எடுப்போம். இந்த சனாதன ஒழிப்பு மாநாடு வெல்ல என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சனாதனம் வீழட்டும், திராவிடம் வெல்லட்டும் என்று கூறி எனது உரையினை நிறைவு செய்து வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். நன்றி, வணக்கம்.” என தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி, அமைச்சர் சேகர்பாபு, தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த மதுக்கூர் ராமலிங்கம், திரைக்கலைஞர் ரோகிணி, ஆதவன் தீட்சண்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
CM Stalin:
"ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை நிறுத்துக” - மத்திய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
RahulGandhi On EVM : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
Embed widget