Mahavishnu: மகாவிஷ்ணுவை 3 நாள் போலீஸ் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி; அடுத்து என்ன.?
Mahavishnu - Police Custody: மகாவிஷ்ணுவை 7 நாள் விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறை அனுமதி கோரியிருந்த நிலையில் 3 நாள் நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த ஆன்மீக பேச்சாளர் என்ற கூறப்படும் மகாவிஷ்ணுவை , 3 நாள் காவல்துறை விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மகாவிஷ்ணுவை 7 நாள் விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறை அனுமதி கோரியிருந்த நிலையில் 3 நாள் நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தமைக்காக, மகாவிஷ்ணு கடந்த 7 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
சில தினங்களுக்கு முன்பு , சென்னை அரசுப் பள்ளிகளில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பேசிய பேச்சுக்கள் மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியருடன் கருத்து மோதலில் ஈடுபட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
மேலும் அவர் மாற்றுத்திறனாளிகள் பற்றிய அவரது பேச்சும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.
அவர் மீது, மாற்றுத்திறனாளிகள் குறித்து திருவொற்றியூர் காவல்நிலையம் உள்பட பல்வேறு காவல் நிலையத்தில் பலரும் புகார் அளிக்கப்பட்டது.இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவிடம் சென்னை விமான நிலையத்தில் வைத்தே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
பரம்பொருள் எனும் அறக்கட்டளை வைத்து நடத்தி வரும் மகாவிஷ்ணு ஆன்மீக சொற்பொழிவுகளை பல இடங்களில் நிகழ்த்தி வருகிறார். அவரது பெரும்பாலான கருத்துக்கள் பகுத்தறிவுக்கு முரணாக இருப்பதால் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில், சென்னை அசோக் நகரில் உள்ள பிரபலமான அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பேசிய மகாவிஷ்ணு மாற்றுத்திறனாளிகள் குறித்தும், மறுபிறவி குறித்தும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினார். அதைத் தடுத்து கேள்வி கேட்ட அந்த பள்ளியில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர் சங்கரிடம் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார்.
இந்த சூழலிலே மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பில் பல காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சூழலிலே, ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பியுள்ள மகாவிஷ்ணுவை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மகாவிஷ்ணுவை 7 நாள் விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறை அனுமதி கோரியிருந்த நிலையில் 3 நாள் விசாரணைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.
பள்ளியில் மூடநம்பிக்கை ஏற்றுக்கொள்ள முடியவில்லை...https://t.co/wupaoCz9iu | #anbilmahesh #mahavishnu #tamilnews #tamilnadu pic.twitter.com/CiOuLzB73N
— ABP Nadu (@abpnadu) September 11, 2024