மேலும் அறிய

கோடைக்கால பயணிகள் நெரிசலை குறைக்க தூத்துக்குடி–தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தூத்துக்குடி மற்றும் சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான விரிவான கால அட்டவணையை தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

கோடைக்கால விடுமுறை, திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்களின் அதிகமான பயண தேவையை முன்னிட்டு, பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தூத்துக்குடி மற்றும் சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான விரிவான கால அட்டவணையை தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடியில் இருந்து தாம்பரம் நோக்கி இயக்கப்படும் வண்டி எண் 06018, ஏப்ரல் 20 மற்றும் ஏப்ரல் 27 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.


கோடைக்கால பயணிகள் நெரிசலை குறைக்க தூத்துக்குடி–தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

அதேபோல், தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி இயக்கப்படும் வண்டி எண் 06017, ஏப்ரல் 21 மற்றும் ஏப்ரல் 28 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு முக்கிய இடங்களில் நிறுத்தம் அளிக்கின்றன. குறிப்பாக தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 17 எல்.எச்.பி. (LHB) பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் பாதுகாப்பு மற்றும் சௌகரியம் அதிகரிக்கும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சிறப்பு ரயில்கள் மூலம் வழக்கமான ரயில்களில் ஏற்படும் அதிக நெரிசல் குறையும் என்றும், முன்பதிவு செய்ய முடியாமல் தவித்த பயணிகளுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வேலை, கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக பயணம் செய்யும் மக்களுக்கு இது மிகுந்த உதவியாக இருக்கும். கோடை காலத்தில் மாணவர்கள் மற்றும் குடும்பங்களின் பயணங்கள் அதிகரிக்கும் நிலையில், இந்த ஏற்பாடு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என கூறப்படுகிறது.

இந்த சிறப்பு ரயில்களை இயக்கியதற்காக தெற்கு ரயில்வேக்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்திலும் இத்தகைய கூடுதல் சேவைகள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget