மேலும் அறிய

OBC Reservation: சமூக அநீதி; ஓபிசி உள் இட ஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்துக - ராமதாஸ் வலியுறுத்தல்

நீதிபதி ரோகிணி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஓபிசி உள் இட ஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

நீதிபதி ரோகிணி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஓபிசி உள் இட ஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 27% இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப் பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கை 6 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மிகவும் தாமதம் என்றாலும், இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆகும்.

இந்தியாவில் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனாலும் கூட  பிற்படுத்தப்பட்டோரில் பெரும்பான்மையான மக்களுக்கு இடஒதுக்கீட்டின் பயன்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்த சமூக அநீதி குறித்து பல ஆண்டுகளாகவே பா.ம.க. உள்ளிட்ட  கட்சிகள் குரல் கொடுத்து வந்த நிலையில், அது பற்றி ஆய்வு செய்யவும், உள் ஒதுக்கீடு பற்றி பரிந்துரைப்பதற்காகவும் 02.10.2017 அன்று நீதிபதி ரோகிணி தலைமையில் 5 பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டது. 3 மாதங்களில், அதாவது 2018-ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதிக்குள் ஆணையம் அறிக்கை அளித்திருக்க வேண்டும். ஆனால், 6 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

6 ஆண்டுகள் தாமதம்

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு சமூகநீதி கிடைக்க வேண்டுமானால், அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதுதான் தீர்வு ஆகும். அதைக் கருத்தில் கொண்டு தான் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு 6 ஆண்டுகள் தாமதமாகி விட்ட நிலையில், இனியும் தாமதிக்காமல், பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதுதான் சமூக நீதியாக அமையும். ஓபிசி உள் இட ஒதுக்கீடு வழங்குவதில் செய்யப்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் ஓபிசி வகுப்பினருக்கு செய்யப்படும் சமூக அநீதியாகவே பார்க்கப்படும்.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டில்  உள் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியதன் தேவையையும், அவசரத்தையும் வலியுறுத்துவதற்காக சில புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஓபிசி வகுப்பில் மொத்தம் 2633 சாதிகள் உள்ளன. அவர்களில் 983 சாதிகளுக்கு, அதாவது 37.33 விழுக்காட்டினருக்கு  ஓபிசி இட ஒதுக்கீட்டால் இதுவரை எந்தப் பயனும் கிடைக்கவில்லை. அதேபோல், மேலும் 994 சாதிகளுக்கு, அதாவது 37.75 விழுக்காட்டினருக்கு 2.66% இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கிறது. பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளில்  75 விழுக்காடான  1977 சாதிகளுக்கு 2.66% இடங்கள் மட்டுமே கிடைக்கின்றன. இது மிகக்கொடிய சமூக அநீதியாகும்.

சமூக அநீதி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு?

அதேநேரத்தில், மற்றொருபுறம், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள 10 சாதிகள் மட்டுமே, அப்பிரிவுக்கான இட ஒதுக்கீட்டில் 24.95 விழுக்காட்டைக் கைப்பற்றுகின்றன; மேலும் 38 சமுதாயங்கள் 25.04 விழுக்காட்டையும், 102 சமுதாயங்கள் இன்னொரு 25.03 விழுக்காட்டையும் கைப்பற்றுகின்றன.  அதாவது, ஓபிசி வகுப்பில் 5.60 விழுக்காடு சாதிகள், 75.02 விழுக்காடு பயன்களை அனுபவிக்கின்றன. இத்தகைய சமூக அநீதி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்?

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பது சமூகநீதிக்கும் பொருந்தும். மத்திய அரசின் வேலை  வாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அவர்களால் இன்னும் 12 விழுக்காடு பிரதிநிதித்துவத்தைக் கூட எட்ட முடியவில்லை. அதற்கு காரணம் ஏற்கனவே, அரசு வேலைவாய்ப்புகளை அனுபவித்து வரும் சமூகங்கள், தங்களுக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி, வேலைவாய்ப்புகளை விட்டுத் தர மறுப்பதுதான். ஓபிசி உள் இட ஒதுக்கீட்டிலும் இதே சூழல் தொடரும். எந்த அளவுக்கு விரைவாக உள் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதோ, அந்த அளவுக்குதான் பின்தங்கிய நிலையில் உள்ள சாதிகளுக்கு சமூகநீதி கிடைக்கும்.

இந்த உண்மையை மத்திய அரசு உணர்ந்து கொண்டு, தற்போது மத்திய சமூகநீதி & அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் உள்ள நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கையை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதன் மூலம், அதன் விவரங்கள் மக்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும். ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு ஆய்வு செய்து, அதனடிப்படையில் ஓபிசி உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை அடுத்தக் கூட்டத் தொடரின் போது நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget