அதிசார குரு பெயர்ச்சி 2025 - சிம்ம ராசி
ஐந்தாம் அதிபதி 12 ஆம் வீட்டிற்கு செல்வதன் மூலம் நீண்ட தூர பிரயானங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்

அதிசாரம் என்றால் முன்னோக்கி (or) மிக வேகமாக நகர்வது என்று பொருள்... குறிப்பாக கிரகங்களுக்கு மூன்று விதமான பயணங்கள் உண்டு அது பூமியிலிருந்து நம் பார்க்கும் பார்வையை பொறுத்தது... கிரகங்கள் சீரான வேகத்தில் அவரது நேர்கோட்டில் நகர்ந்து கொண்டு இருப்பார்கள்... பூமியிலிருந்து ஒரு கிரகம் எப்படி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை வைத்துத்தான் தற்பொழுது நான் கிரகங்களின் நகர்வை பற்றி சிறிதாக சொல்கிறேன்...
குரு தற்பொழுது மிதுன ராசியில் பயணித்துக் கொண்டிருக்கிறார்... அது சீரான பயணம்... ஆனால் அந்த குருவே சூரியனுக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரும் பொழுது பின்னோக்கி பயணிப்பது போல் தெரியும்...அதை நாம் ’வக்கிரம்’ என்று கூறுகிறோம்... இதே போல தான் குரு மிக வேகமாக முன்னோக்கி நகர்ந்து... மிதுன ராசியில் தென்படும் குருபகவான் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி கடக ராசிக்கு செல்வது போல தெரியப்போகிறது... உண்மையிலேயே அவர் கடக ராசியில் தான் பிரவேசிக்கப் போகிறார்... இப்படி உச்சம் என்ற நிலைக்கு குருபகவான் போகும்பொழுது உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுப்பார் என்ற உண்மையான விவரங்களை தற்போது தெரிந்து கொள்வோம்...
அன்பார்ந்த வாசகர்களே சிம்ம ராசிக்கு இதனால் வரையில் 11ம் பாவத்தில் குரு பகவான் அமர்ந்து ஏனைய பிரச்சினைகளை ஏதோ ஒரு வகையில் சரி செய்வதற்கான ஏற்பாடுகளை கொடுத்துக் கொண்டிருந்தார்... தற்பொழுது 12 ஆம் வீட்டில் குரு வருகிறாரே அதிகப்படியான செலவுகளை கொடுப்பாரா என்றால் ஆம் என்றும் சொல்லலாம் இல்லை என்றும் சொல்லலாம்... எப்படி எனில் நீங்கள் ஒரு வாகனத்தை வாங்க விரும்புகிறீர்கள் என்றால் உங்கள் வீட்டிற்கு அது வரவு தான் ஆனால் உங்கள் கையில் இருந்து செலவாகத்தான் செய்யும்... அப்படித்தான் சுபச் செலவுகளை அதிகப்படுத்தி தேவையில்லாத செலவுகளை குறைப்பதற்கான வழிவகைகளை செய்வார் குரு... வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி அதிகார குரு பெயர்ச்சி நடக்கவிருக்கிறது....
இந்த சமயத்தில் உங்களுடைய ராசிக்கு ஐந்து மற்றும் எட்டாம் இடத்து அதிபதியான குரு பகவான் 12ஆம் இடத்தில் அமர்கிறார் ஐந்தாம் அதிபதி 12 ஆம் வீட்டிற்கு செல்வதன் மூலம் நீண்ட தூர பிரயானங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்... பிள்ளைகள் வழியில் தேவையற்ற செலவுகள் இருந்தாலும் அவை உங்களுக்கு சாதகமான செலவுகள் ஆகவே இருக்கும்... குறிப்பாக எட்டாம் இடத்து அதிபதி பனிரெண்டாம் வீட்டிற்கு செல்லும் பொழுது மறைமுகமான எதிரிகளின் வலிமையை நீங்கள் உணர்ந்து அவர்களின் சதித்திட்டங்களை முறியடிப்பீர்கள்... உங்களுக்கு எதிராக வேலை பார்க்கும் யாராக இருந்தாலும் தற்போது அவர்கள் ஓடி ஒளியும் காலகட்டம்...
பொருளாதாரத்தை பொறுத்தவரை சேமிப்பு இருக்கும் அதே போல சற்று செலவும் இருக்கும்... பிரயாணங்களால் திக்கு முக்காடும் காலகட்டம் என்று கூட சொல்லலாம்... இன்று சென்னையிலிருந்து நாளை கன்னியாகுமரிக்கு செல்வீர்கள் மறுநாள் மும்பைக்கும் செல்லலாம் இப்படியாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சுற்றுலா செல்வதற்கான காலமாகவும் அமையும்... சிலருக்கு வெளிநாடு தொடர்பு இருக்குமாயின் அவர்கள் அயல்நாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகப்படியாக உள்ளது... ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் அவர்களுக்கு என்ன திசை நடக்கிறதோ அதற்கு ஏற்றார் போல் பல நடக்கும் புத்திநாதன் எந்த நிலையில் அமர்ந்திருக்கிறாரோ அதுபோல ஜாதகருக்கு சிறப்பான பலன்களை வாரி வழங்கவும் தயாராக இருக்கிறார்....
கேது சிம்மத்தில் அமர்ந்திருக்க அருகிலேயே குரு பகவான் வருகிறார்... கிட்டத்தட்ட இது ஒரு கோடீஸ்வர யோகம் தான்... அதிகப்படியான பணம் எங்கிருக்கிறது என்பது உங்கள் கண்களுக்கு தெரிந்தால் அது கோடீஸ்வர யோகம் தானே.... ஒருவர் வீட்டில் பணம் முடங்கி கிடக்கிறது என்றால் அந்த பணம் உங்கள் கைகளுக்கு வர வாய்ப்பு இருக்கிறது... குருபகவான் சிம்மத்திற்கு ஒரு யோகம் கொடுப்பவரே காரணம் சூரியனுக்கு ஐந்தாம் வீட்டில் தனுசு ராசி மூலத்திரிகோண வீடு குருவுக்கு ஆகையால் நிச்சயம் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் அவர் நன்மையை செய்து விட்டு தான் செல்ல வேண்டும்.... வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் உங்களுக்கு வழிகாட்டுவதற்காகவே குரு ஒருவர் உங்கள் வாழ்க்கை பயணத்தில் உங்களுடனே வருவார்...
ஆகையால் பன்னிரண்டாம் இடத்திற்கு வரும் குருவைக் கண்டு நீங்கள் பயப்பட தேவையில்லை... ஒருவேளை ஏதாவது படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அதற்கான அப்ளிகேஷன் போடுவதற்கான வாய்ப்புகள் தற்போது வரும்... புதிய வாகனங்கள் வாங்கவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.... வீடு மனை யோகம் பிரமாதமாக இருக்கிறது நீங்கள் அதில் கவனம் செலுத்தலாம்.... 108 முறை ஸ்ரீ குருவே நமஹ என்று வியாழக்கிழமை தோறும் கூறி வாருங்கள் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷம் பெறுங்கள்...




















