(Source: ECI/ABP News/ABP Majha)
அதிரவைக்கும் பாலியல் குற்றங்கள்.. தமிழ்நாட்டை உலுக்கும் இந்த பயங்கரங்களுக்கு என்ன தீர்வு?
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தி தாளை திறந்தாலே கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை.. அட என்னப்பா இது என சினிமாக்களில் வசனம் இடம்பெற்றுள்ளதை கேட்டிருப்போம். ஆனால் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெளி வரும் செய்திகள் இந்த வசனத்தை ஒத்து அமைந்துள்ளன.
கடந்த 21ம் தேதி விருதுநகரில் ஓராண்டு காலமாக நடைப்பெற்று வந்த பாலியல் கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. காதலன் போன்று நடித்து ஏமாற்றி, இளம் பெண்ணுடம் தனிமையில் இருக்கும் போது அதை வீடியோவாக பதிவு செய்து, மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டுள்ளார். அது மட்டுமின்றி அந்த வீடியோவை தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பி, அவர்களும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுவதாக மிரட்டி அந்த இளம் பெண்ணை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். திமுக நிர்வாகிகள் இருவர், சிறார் நான்கு பேர் உட்பட் 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
அதே வாரத்தில் அதற்கு அடுத்த நாள், மேலும் ஒரு திடுகிடும் சம்பவம் வெளியானது. தனது நண்பருடன் சினிமா படம் பார்க்க இரவு காட்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த இளம் பெண்ணையும், அவருடைய நண்பரையும் ஷேர் ஆட்டோ என ஏமாற்றி கடத்திய ஐந்து பேர் பாலாற்று கரையோரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, நகை, பணம், செல்போன் ஆகியவற்றை பரித்துள்ளனர். பணத்தை பங்கிட்டு கொள்வதில் மது போதையில் ஏற்ப்பட்ட தகராறில், அவர்கள் பொது வெளியில் உளர இந்த சம்பவம் வெளிசத்திற்கு வந்து, குற்ற செயலை செய்த இரண்டு சிறார்கள் உட்பட் ஐந்து நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அதே வாரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் துறைமுக கடற்கரை பகுதியை சுற்றிப்பார்க்க சென்ற காதல் ஜோடியை மிரட்டி நகை, செல்போன் உள்ளிட்டவற்றை பறித்த கும்பல் ஒன்று, காதலன் கண்முன்னேயே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் பத்மேஸ்வரன், தினேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கைது செய்ய காவல்துறை முற்பட்ட போது ஏற்பட்ட மோதலில், காவலர்களை அவர்கள் வெட்டிய சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அதற்கு முந்தைய வாரத்தில் திருப்பூர் மாவட்டம் சின்னக்கரை பகுதியில் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும் கட்டிட மேஸ்திரியுமான சிவகுமார் பாலியல் துன்புறுத்தல் கொடுத்தாக கைது செய்யப்பட்டார். அதே போல விருதுநகரில் பள்ளி மாணவியை மிரட்டி திமுக நிர்வாகி வீரணன் பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தான் கடலூரில் தன் காதலனுடன் நின்று பேசிக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவரை காதலன் கண் முன்னே பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்..
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். திமுக-வை சேர்ந்தவர்கள் சிலரே குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளதும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதால் அவர்களை கட்சியின் அடிப்படை பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கி கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும் முக்கிய வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏனேனினும் அடுத்தடுத்த வாரத்தில் தொடர்ந்து இது போன்று வெளிவந்து கொண்டிருக்கும் இது போன்ற செய்திகள் தமிழக மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்