மேலும் அறிய

Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு...ஆகஸ்ட் 28ல் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி  வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Senthil Balaji Custody: செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி  வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல் நீட்டிப்பு:

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றம் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்திருந்தது.  இதனை அடுத்து, அமலாக்கத்துறை காவல் முடித்து, 12ம் தேதி செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது, அவருடைய நீதிமன்ற காவல் 14 நாட்களுக்கு, அதாவது 25.8.2023 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை/புகார், கோப்பிற்கு எடுக்கப்பட்டு, வழக்கு எண்ணிடபட்டு, வாய்தா தேதி 28.8.2023 என நிர்ணயிக்கப்பட்டது. வழக்கின் வாய்தா தேதி 28.8.2023 என்பதால், தற்போது, நீதிமன்ற காவல் 3 நாள் மட்டும் நீட்டிக்கப்பட்டது.

இன்றுடன் காவல் நிறைவடைந்ததை அடுத்து, எம்.எல்.ஏ, எம்.பிக்கள் வழக்குகளை விசாரிக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவக்குமார், அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீடித்து உத்தரவிட்டார்.  செந்தில் பாலாஜியின் காவலை 28ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு, அன்றைய நாள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிறைத்துறைக்கு ஆணையிட்டார்.

வழக்கின் பின்னணி:

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். 

செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பளிக்கையில், “இரண்டு நீதிபதிகள் அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர்.

செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க 

AIADMK: அதிமுகவில் இனி இபிஎஸ்தான்: ஓபிஎஸ்-க்கு பின்னடைவு - அதிரடி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்

தலைப்பு செய்திகள்

தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
சிந்தாமணி ஸ்டேஷனில் லாக்கப் மரணம்? “தவெக ஆட்சியில் தொடரும் கொடூரம்” - டிடிவி தினகரன் கொந்தளிப்பு
சிந்தாமணி ஸ்டேஷனில் லாக்கப் மரணம்? “தவெக ஆட்சியில் தொடரும் கொடூரம்” - டிடிவி தினகரன் கொந்தளிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget