மேலும் அறிய

தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல் பிடிஆர் கெட்டார்: அமைச்சர் செல்லூர் ராஜூ

தவளை தன் வாயால் கெடும் என்பது போல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கெட்டார் என்று விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செல்லூர் ராஜூ.

தவளை தன் வாயால் கெடும் என்பது போல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கெட்டார் என்று விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செல்லூர் ராஜூ.

சில தினங்களுக்கு முன் பிடிஆர் ஆடியோ வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பிடிஆர் மற்றும் முதலமைச்சர் விளக்கம் அளித்தனர். இந்த சூழலில் அவரிடம் இருந்த நிதி துறை தங்கம் தென்னரசுக்கு வழங்கப்படும் என பேச்சுக்கள் அடிப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சரவையில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு இடம் கொடுப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதனால் கண்டிப்பாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனவும் பிடிஆர் பதவி மாற்றப்படும் எனவும் தொடர்ந்து செய்திகள் கசிந்தன. 

இந்நிலையில் அண்மையில் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் குறிப்பாக அதிமுக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. அந்த வகையில் தான் செல்லூர் ராஜூவும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை விமர்சித்துள்ளார்.

ஏற்கெனவே, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ விவகாரம் உண்மை என்பதால் தான் அவருக்கு டம்மியான இலாகா கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி திமுகவின் லட்சணம் என அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைசெல்வன் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது கூறியிருந்தார்.

இந்நிலையில், மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க அவர் குரல் அடங்கிய ஆடியோ வெளியானது தான் காரணமாகும். தவளை தன் வாயால் கெடும் என்பது போல அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் கெட்டுள்ளார். இப்போது அவரது துறையை மட்டும் பறித்துள்ளனர். எங்கே அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினால், ஆடியோ விவகாரம் உண்மையாகி விடுமோ என்ற அச்சத்தால் துறையை மாற்றி நிதித்துறைக்கு பதிலாக ஒரு சாதாரண துறையைக் கொடுத்துள்ளனர் என்றார்.

இருவருமே எங்கள் நண்பர்கள் தான்:

தொடர்ந்து தேர்தல் கூட்டணி பற்றிப் பேசிய செல்லூர் ராஜூ, "பாஜக.வும், காங்கிரஸும் எங்கள் நண்பர்கள் தான். எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். எங்களுடைய ஒரே அரசியல் எதிரி திமுக மட்டும் தான்" என்று கூறினார்.

விஜய் என்ன யார் வேண்டுமானாலும் வரலாம்..
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்று கேட்கிறீர்கள்.  நம் நாடு ஜனநாயக நாடு. இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஷாலை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்தார். விஷாலே அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லும்போது, பல படங்கள் ஹிட் கொடுத்த நடிகர் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தேர்தலை சந்திக்கட்டும். அதன் பின்னரே அவருடைய செயல்பாடுகள் குறித்தும், அவருடன் கூட்டணி வைப்பதா என்பது குறித்தும் சொல்ல முடியும். 

மய்யம் போன இடம் தெரியவில்லை..
நடிகர் கமல் கூட மக்களுக்கு நல்லது செய்ய போவதாக சொல்லித்தான் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இப்போது நீதியும், மய்யமும் எங்கே போனது? என்று தெரியவில்லை என்றார். 

தலைப்பு செய்திகள்

DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
Viral Video: ஷாக்கிங் வீடியோ! இப்படியா பண்ணுவீங்க? பள்ளி மாணவர்களை அந்த வேலையை செய்ய வைத்த அவலம்
ஷாக்கிங் வீடியோ! இப்படியா பண்ணுவீங்க? பள்ளி மாணவர்களை அந்த வேலையை செய்ய வைத்த அவலம்
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
Chennai Power Cut: சென்னைல ஜூலை 25-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜூலை 25-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Best Anti-Theft Cars : ’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ உங்களிடம் இந்த கார்கள் இருக்கிறதா..?
’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ இதுதான் பயத்திற்கு காரணம்..!
Embed widget