சிவராத்திரி நிகழ்வு அறநிலைத்துறை சார்பில் அல்ல... வீரமணியின் அறிக்கைக்கு விளக்கமளித்த சேகர்பாபு..!
இந்து அறநிலைத்துறை சார்பில் மார்ச் 1 ம் தேதி இரவு கபாலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் இந்த மஹாசிவராத்திரி கொண்டாடப்பட்டு வந்தாலும், இந்து அறநிலைத்துறை சார்பில் மார்ச் 1 ம் தேதி இரவு கபாலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இதற்கு திராவிட கழகத்தின் தலைவர் கீ.வீரமணி, வன்னியரசு போன்ற தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர் என்பது செய்தி. இந்து அறநிலையத் துறை, அதன் அதிகாரிகள், அமைச்சர் போன்றவர்களின் பணி என்பது பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவதோ, செயல்படுவதோ அல்ல.
கோவில் சொத்து, வரவு - செலவுகளைக் கண்காணிப்பதும், சரி பார்ப்பதும், நிர்வகிப்பதும் மட்டும் தான். நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள், அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, இந்து அறநிலையத் துறையும் அவர் பொறுப்பில் இருந்தது. சிதம்பரம் நடராஜன் கோவிலுக்கு நாவலர் சென்ற போது, தீட்சதர்கள் அவருக்கு அளித்த பிரசாதத்தை இந்தக் கையில் வாங்கி, அந்தக் கைவழியாக விலக்கிவிட்டார் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், ஆண்டுதோறும் மார்ச் 1ம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார். அதன்பிறகே அறிஞர் அண்ணா நினைவிடம், கலைஞர் நினைவிடம் செல்ல இருக்கிறார். இதையடுத்து, முதலமைச்சர் முக ஸ்டாலின் வருகையொட்டி அதன் ஏற்பாடுகள் குறித்து இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
திராவிட முன்னேற்ற கழகத்தில் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான முக ஸ்டாலின் அவர்களுக்கு மார்ச் 1 ம் தேதி பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினத்தில் தலைவர் முக ஸ்டாலின் பெரியார் திடலுக்கு வந்து மரியாதை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார். அவர் வருகையையொட்டி, ஏற்பாடுகள் என்ன என்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டேன். அப்பொழுது திராவிட கழகத்தின் தலைவர் கீ. வீரமணி அவர்களை சந்திந்து பேசினேன்.
ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்த வீரமணி, ஏதேனும் உதவிகள் வேண்டுமென்றால் தயங்காமல் கேட்டுக்கும்படி கூறினார்.தொடர்ந்து, செய்தியாளர்கள் வீரமணி அறிக்கை மூலம் அமைச்சரின் பணி பூஜை புனஷ்காரங்கள் செய்வதல்ல என்று தெரிவித்தார். இதனால் சிவராத்திரி நிகழ்வு தடை படுமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சேகர்பாபு, திட்டமிட்டபடி சிவராத்திரி நிகழ்வு நடைபெறும். இது இந்து அறநிலைத்துறை சார்பில் நடத்தப்படும் நிகழ்வு அல்ல, கபாலிஸ்வர் சார்பில் நடத்தப்படும் நிகழ்வாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்