மேலும் அறிய
Advertisement
Sathya Murder Case: ரயிலில் தள்ளி மாணவி கொலை: குற்றவாளிக்கு 28-ந் தேதி வரை நீதிமன்ற காவல்
கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த இளைஞருக்கு வரும் 28-ந் தேதி வரை நீீதிமன்ற காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, பரங்கிமலையில் நேற்று சத்யா என்ற கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு தப்பிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளம்பெண் சத்யாவை கொலை செய்த குற்றவாளி சதீஷை போலீசார் நேற்றே கைது செய்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சதீஷை இன்று போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சதீஷை காவல்துறையினர் முகத்தை மறைத்து அழைத்து வந்தனர். அப்போது, அவரது முகத்தை ஏன் மறைத்து அழைத்து வருகிறீர்கள்? என்று வழக்கறிஞர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், கொலையாளி சதீஷ் மீது தாக்குதல் முயற்சி நடத்தினர். இந்த நிலையில், கொலையாளி சதீஷை அக்டோபர் 28-ந் தேதி முதல் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion