மேலும் அறிய

பச்சிளங்குழந்தை முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை; அமைதி மாவட்டத்தில் இப்படி ஒரு கொடுமையா? - தவெக

பச்சிளங்குழந்தை முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை! திமுக அரசின் இமாலய சாதனை! விளாத்திகுளத்தின் அலறல் அடங்குமுன் அடுத்த கொடுமை அரங்கேறியுள்ளது.

சேலத்தில் மூதாட்டியை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவத்திற்கு தவெக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் ஐடிவிங் எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தமிழகத்தின் அமைதி மாவட்டமாக அறியப்படும் சேலத்தில், 66 வயது மூதாட்டி ஒருவரை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது. தாயுள்ளம் கொண்ட ஒரு மூதாட்டிக்கு நேர்ந்த இந்த இழிவான செயல், ஒட்டுமொத்த தமிழகத்தையே தலைகுனியச் செய்துள்ளது. இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளின் மனமே திமுக அரசின் ஐந்தாண்டு அடையாளம்! "விடியல் தருவோம்" என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று முதியோர்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற ஒரு இருண்ட சூழலை உருவாக்கியுள்ளனர். பட்டப்பகலில் வழிப்பறி, தொடர் கொலைகள் எனத் தொடங்கி, தற்போது 60 வயதைக் கடந்த மூதாட்டிகளைக் கூட விட்டுவைக்காத அளவிற்கு குற்றவாளிகள் துணிச்சலுடன் வலம் வருவது மட்டுமே திமுகவின் சாதனை. இந்தக் குற்றச் செயல்களின் பின்னணியில் தமிழகத்தில் தடையின்றிப் புழங்கும் போதைப் பொருட்களின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தத் தவறியது இந்த அரசின் மிகப்பெரிய நிர்வாகத் தோல்வியாகும். போதையின் பிடியில் சிக்கியுள்ள இளைஞர்கள் தங்களின் நன்னெறியைத் தொலைத்துவிட்டு, இது போன்ற மிருகத்தனமான செயல்களில் ஈடுபடுவது சமூகச் சீரழிவிற்கு வழிவகுக்கிறது. காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர், விளம்பரங்களில் காட்டும் கவனத்தை மக்களின் பாதுகாப்பில் காட்டத் தவறிவிட்டார். ஸ்டாலின் அவர்களே.. உங்களுக்கு தகுந்த பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.


பச்சிளங்குழந்தை முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை; அமைதி மாவட்டத்தில் இப்படி ஒரு கொடுமையா? - தவெக

அண்ணாமலையும் கண்டனம் தெரிவிப்பு

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளப்பக்கத்தில், ‘சேலம் கோரிமேடு அருகே, 66 வயது மூதாட்டியை, கஞ்சா போதையில் இரண்டு பேர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில், தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கம் பெருகியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் கூட கஞ்சா புழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் பின்விளைவுகள் மிகவும் அச்சமூட்டுகின்றன. நமது குழந்தைகள் எதிர்காலம் குறித்து பயம் ஏற்படுகிறது. எங்கெங்கு கஞ்சா விற்பனை நடக்கிறது என்பது பள்ளி செல்லும் மாணவர்களுக்குக் கூட தெரிந்திருக்கிறது. ஆனால், காவல்துறைக்குத் தெரியவில்லை என்பதை ஏற்க முடியாது. கஞ்சா விற்பனையின் பின்னணியில், பெரும்பாலும் திமுகவினர் இருப்பதால், ஐந்து ஆண்டுகளாக, காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகள் கட்டப்பட்டு இருந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதற்கு மேலும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, பொதுமக்களுக்குச் செய்யும் துரோகம். உடனடியாக, தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கஞ்சா புழக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை: ஆதார் இணைக்காவிட்டால் மாதாந்திர மானியம் நிறுத்தம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை: ஆதார் இணைக்காவிட்டால் மாதாந்திர மானியம் நிறுத்தம்!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் இலவசப் பேருந்து சேவை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் இலவசப் பேருந்து சேவை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Embed widget