மேலும் அறிய

ஆடிப்பெருக்கில் ஆற்றில் இறங்க வேண்டாம்; ஆட்சியர் எச்சரிக்கை

ஆடிப்பெருக்கு நாளில் காவிரி ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படவுள்ளதால் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆடிப்பெருக்கு நாளில் காவிரி ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படவுள்ளதால் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஆடிப்பெருக்கு நாளில் ஆண்டு தோறும் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையில் இருந்து இந்த ஆண்டு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கபடவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால், அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் யாரும் நீராட வேண்டாம் என எச்சரித்துள்ளார். மேலும், கரையோரம் வசிக்கும் மக்கள் முகவும் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார். அபரிமிதமான நீர் திறக்கப்படவிருப்பதால், ஆற்றில் இறங்கவோ, ஆற்றுக்கு அருகில் செல்லவோ, செல்பி எடுக்க முயற்சிப்பதோ கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். 

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கர்நாடகத்தின் பெரும்பாலான இடங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. தற்போது அணைக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் கனஅடி நீர் வந்துகொண்டு உள்ளது. அணையில் இருந்து உபரி நீராக வெளியேற்றப்படும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கரையோற மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், காவிரி ஆறு ஓடும் திருச்சி மாவட்டத்திலும், ஆடிப்பெருக்கின் போது காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. காவிரி வரும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆடிப்பெருக்கு விழாவை ஆற்றங்கரைகளில் கொண்டாட காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் வீடுகளில் உள்ள காவிரி குடிநீர் குழாய்க்கும், ஆழ்குழாய் கிணற்றிலும் பூஜை செய்து வழிபட்டனா். இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா அன்று காவிரி படித்துறைகள் களை இழந்து காணப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நாளை  கொண்டாடப்பட உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு மத்தியில் எம்பிக்கள் கூட்டம்! டெல்லிக்கு எதிராக முதல்வர் விஜய் எடுத்த முடிவு என்ன?
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு மத்தியில் எம்பிக்கள் கூட்டம்! டெல்லிக்கு எதிராக முதல்வர் விஜய் எடுத்த முடிவு என்ன?
தென் மாவட்ட பயணிகளுக்கு வரப்பிரசாதம்! திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்கள்!
தென் மாவட்ட பயணிகளுக்கு வரப்பிரசாதம்! திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Embed widget