மேலும் அறிய

பாலிடெக்னிக், ஐடிஐ மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

நிதித்துறையில் ஒற்றைச்சாளர முறை கொண்டு வரப்படும் எனவும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

பொதுபட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று பதிலுரை அளித்தார். அதில், 10ஆம் வகுப்பு படித்து விட்டு பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவிகள், உயர்கல்வியில் சேரும்போது மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று என்று பட்ஜெட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் மாணவிகளுக்கு அரசு அறிவித்த தொகை கிடைக்குமா? என்று சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது அமைச்சர் அதற்கு விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக, காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்றும், நிதித்துறையில் ஒற்றைச்சாளர முறை கொண்டு வரப்படும் எனவும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

மதுரை மெட்ரோ ரயில் சேவைக்கான சாத்தியக்கூறு பற்றி ஆய்வு செய்து மே மாதத்திற்குள்  தெரிவிக்கப்படும் என்று பொதுபட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் பதிலுரையின்போது கூறினார். மேலும், கோவை மெட்ரோல் ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாராகிவிட்டது என்றும் கூறினார்.

19 சட்ட மசோதாக்கள் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாகவும், பொருளாதார ஆலோசனைக்கான குழுவினர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் பணியாற்றுகின்றனர், முதலமைச்சர் மீது மரியாதை வைத்தும், நாட்டுக்காகவும் பணியாற்றுக்கிறார்கள் எனவும் அமைச்சர் பிடிஆர் கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் 90 சதவீதம் குடும்பத்திற்கு மேல் செல்போன் வைத்திருக்கிறார்கள் என்றும், தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம் என்றும்,  தமிழ்நாட்டில் 75 சதவீதத்துக்கு மேலான மக்கள் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள் எனவும் கூறினார்.

அதிமுக ஆட்சியில் கடன் அளவு அதிகரிப்பு

  “கலைஞர் ஆட்சி நிறைவடையும்போது தமிழ்நாடு அரசின் கடன் மாநில ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 17.33% ஆக இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு 15.55 சதவீதமாக கடன் அளவு குறைக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மீண்டும் கடன் மளமளவென்று உயர்ந்துவிட்டது” என்று அமைச்சர் பிடிஆர் கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget