மேலும் அறிய

Governor swearing-in | சூழல் ஏற்பட்டால், மாவட்டங்களுக்கு நேர்தில் சென்று ஆய்வு செய்வேன் - புது ஆளுநர் அதிரடி

சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாட்டின் 26-வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றார்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவியேற்ற ஆர்.என்.ரவி ‘வணக்கம்’ என தமிழில் சொல்லி தனது செய்தியாளர் சந்திப்பை தொடங்கினார். பழமையான கலாச்சாரம் கொண்ட தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றதில் தனக்கு பெருமை என பேட்டியளித்தார். .

மேலும், முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்தார், அதுபோன்ற திட்டங்கள் உங்களிடம் உள்ளதா..? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "அதற்கான சூழல் ஏற்பட்டால் அது குறித்து திட்டமிட்டு முடிவு செய்வேன்" என்றும் தெரிவித்தார்.  மேலும், சில காலங்கள் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றியதாகவும் தெரிவித்தார். 

தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், " நிலைமையை அறிந்து தமிழக அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களின் இடர்களை ஆய்ந்து தக்க நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது" என்றும் தெரிவித்தார்.             

Governor swearing-in | சூழல் ஏற்பட்டால், மாவட்டங்களுக்கு நேர்தில் சென்று ஆய்வு செய்வேன் - புது ஆளுநர் அதிரடி

முன்னதாக,  தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த  பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி என்பவரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 9-ந் தேதி உத்தரவிட்டார். 

பதவியேற்பு விழா:  நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்த வந்த ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து அவரது பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 18-ந் தேதி காலை 10.30 மணியளவில் ஆர்.என்.ரவியின் பதவியேற்பு விழா நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின். மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் 10.22க்கு ஆளுநர் மாளிகைக்கு வந்தனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது கட்சியின் மூத்த உறுப்பினர்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு 8வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.

Governor swearing-in | சூழல் ஏற்பட்டால், மாவட்டங்களுக்கு நேர்தில் சென்று ஆய்வு செய்வேன் - புது ஆளுநர் அதிரடி

பதவிப்பிரமாணம் : 

புதிய ஆளுநராக பொறுப்பேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு காவல்துறையினர் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், பதவியேற்பு விழா மேடையில் ஆர்.என்.ரவி, ஆர்.என். ரவியின் மனைவி லட்சுமி ரவி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர்கள் இருந்தனர். அவர்களுடன் பாதுகாப்பு அதிகாரிகளும், அதிகாரிகளும் இருந்தனர்.

Governor swearing-in | சூழல் ஏற்பட்டால், மாவட்டங்களுக்கு நேர்தில் சென்று ஆய்வு செய்வேன் - புது ஆளுநர் அதிரடி

பின்னர், சரியாக 10.40 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி புதிய ஆளுநராக ஆர்.என்.ரவிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்றுக் கொண்ட பிறகு,  ஆர்.என்.ரவிக்கும், அவரது மனைவிக்கும் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் பூங்கொத்து அளித்தும், முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகங்கள் அளித்தும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழா, தேசிய கீதத்துடன் 10.45 மணிக்கு நிறைவு பெற்றது. சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரையில் மட்டுமே இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக இந்த விழாவில் அனைவரும் முகக்கவசம் அணிந்தே பங்கேற்றனர்.

தேநீர் விருந்து : 

இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாட்டின் அமைச்சர்களும், தமிழக எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. எம்.பி.க்கள், தமிழ்நாடு சட்டமன்ற கட்சி குழுக்களின் தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். எட்டாவது வரிசையில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அருகில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அமர்ந்திருந்தார். ஆளுநர் பதவியேற்பு விழா நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்று மாலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த விழாவில், ஆளுநருடன் முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக, தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி நேற்று தமிழ்நாடு வந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் வரவேற்றனர். மேலும், ஆர்.என்.ரவியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஆர்.என். ரவியின் பின்னணி :

Governor swearing-in | சூழல் ஏற்பட்டால், மாவட்டங்களுக்கு நேர்தில் சென்று ஆய்வு செய்வேன் - புது ஆளுநர் அதிரடி

ரவீந்திர நாராயணன் ரவி என்ற ஆர்.என்.ரவி பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவைச் சேர்ந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள ஆர்.என்.ரவி, ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பு வகித்தவர். மத்திய அரசின் உளவுத்துறையில் பணியாற்றியபோது, வடகிழக்கு பகுதிகளில் பெருமளவில் காணப்பட்ட வன்முறைக்கு எதிராக முக்கிய பங்காற்றியவர் இவர், 2012ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், பிரதமர் அலுவலகத்தின் இணை புலனாய்வு குழு தலைவராக செயல்பட்டார். 2018ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

பின்னர், வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றிய அனுபவம் நிரம்ப பெற்ற காரணத்தால் அவரை 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி நாகலாந்து மாநில ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்து உத்தரவிட்டார். தற்போது, அவர் தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பு ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, உளவுத்துறையில் பணியாற்றி  ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரை, தமிழ்நாட்டின் ஆளுநராக நியமித்ததற்கு பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனங்களும் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget