மேலும் அறிய

சேவை உரிமைச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

வலிமையான சேவை பெறும் உரிமைச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 15 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது - அன்புமணி

உங்கள் ‘சகாவு’விடம் பாடம் படியுங்கள் என்றும் நாடகங்களை நடத்தாமல் சேவை உரிமைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது., 

பொதுமக்கள் கோரும் பொதுச்சேவைகளை 30 நாள்களில் வழங்காவிட்டால், அந்த சேவை வழங்கப்பட்டதாக கருதப்படுவதுடன், சேவையை வழங்கத் தவறிய அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் திருத்தப்பட்ட சேவை பெறும் உரிமைச் சட்டம் கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களின் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் கேரள அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் இதற்காக துரும்பைக் கூட கிள்ளிப் போட திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

மக்களுக்குத் தேவையான சாதிச் சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல், திருமணப் பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள், மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட சுமார் 50 சேவைகள் பொதுமக்களுக்கு குறித்த காலத்தில் கிடைப்பதை உறுதி செய்வது தான் சேவைபெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கம் ஆகும். கேரளத்தில் இந்த சட்டம் ஏற்கனவே 2012ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், அந்தச் சட்டம் எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றத் தவறி விட்டது என்பதால் தான் கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய திருத்தப்பட்ட சேவை உரிமைச் சட்டத்தை அம்மாநில அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. புதிய சட்டம் தெளிவாகவும், விரிவாகவும் உள்ளது.

கேரளத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி, பொதுமக்கள் கோரும் அனைத்து சேவைகளும் அதிகபட்சம் 30 நாள்களில் வழங்கப்பட வேண்டும்; ஒருவேளை மக்கள் கோரும் சேவையை வழங்க முடியாது என்றால் அதற்கான காரணங்களுடன் கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டும்; பொதுமக்கள் கோரும் சேவையை வழங்க கூடுதல் ஆவணங்கள் ஏதேனும் தேவை என்றால், அதை வாங்கித் தரும்படி மக்களை தொல்லைப்படுத்தக் கூடாது; மாறாக, சம்பந்தப்பட்ட அலுவலகத்திலிருந்து அதிகாரிகளே பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பம் பெறுவது முதல் சேவை வழங்குவது வரையிலான அனைத்துக் கட்டங்களும் டிஜிட்டல் வடிவில் சேகரித்து வைக்கப்பட வேண்டும் என்று கேரள சட்டத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கோரும் சேவைகள் குறித்த மனுக்கள் மீது அதிகாரிகள் 30 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படும். அதாவது ஒருவர் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்து 30 நாள்களுக்குள் சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால், அவர்களுக்கு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்கப்படும். அதுமட்டுமின்றி, சாதி சான்றிதழ் கோரும் மனு மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிக்கு அபராதமும் விதிக்கப்படும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மூத்த இ.ஆ.ப. அதிகாரி தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது மிகவும் சிறப்பான சேவை பெறும் உரிமைச் சட்டம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இதேபோன்ற வலிமையான சேவை பெறும் உரிமைச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 15 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. இந்தியாவில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இத்தகைய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கேரளத்தில் இத்தகைய சட்டம் இயற்றப்பட்டு, அது வலிமையானதாக இல்லை என்று கூறி புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் பெயரளவில் கூட சேவை பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படாதது அரசின் தோல்வியாகும்.

இத்தனைக்கும் 2021&ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்பின் சட்டப்பேரவையில் ஆளுனர் ஆற்றிய உரையின் போதும், விரைவில் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. மக்களுக்கான சேவைகளை குறித்த காலத்தில் வழங்குவதற்கு தமிழ்நாட்டில் சட்டப்பூர்வமான ஏற்பாடுகள் எதுவும் இல்லை என்பதை சென்னை உயர்நீதிமன்றம் பல முறை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனாலும் கூட, சேவை பெறும் உரிமைச் சட்டத்தைச் கொண்டு வருவதற்காக திமுக அரசு இன்று வரை துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பதே உண்மை.

சேவை பெறும் உரிமைச் சட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டிருந்தால், மக்களுக்குத் தேவையான அனைத்து சேவைகளும் குறித்த காலத்தில் கிடைத்திருக்கும்; அரசு அலுவலகங்களில் கையூட்டு ஒழிந்திருக்கும்; உங்களுடன் ஸ்டாலின் போன்ற ஒன்றுக்கும் உதவாத முகாம்களை நடத்தத் தேவையில்லை. ஆனால், விளம்பரங்களால் மட்டுமே தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, மக்களுக்கு சேவைகள் கிடைப்பது முக்கியமல்ல.... மாறாக, உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் போன்ற நாடகங்களை நடத்தி விளம்பரம் தேடுவதில் தான் ஆர்வம் காட்டுகிறது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக இழைக்கும் பெருந்துரோகம்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லுறவை வைத்திருக்கிறார். கேரள மேடைகளில் தோன்றி,‘‘என்ட பேரு ஸ்டாலின். என்ட சகாவு பினராயி விஜயன்’’ என்றெல்லாம் முழங்குகிறார். ஆனால், கேரளத்தில் செயல்படுத்தப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் கொள்முதல் விலை, சேவை பெறும் உரிமைச் சட்டம் போன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்த மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனம் வரவில்லை. தமிழக மக்கள் நலனில் அவருக்கு அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் சகாவுவிடம் அவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இனியாவது மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு துரோகத்தைக் கைவிட்டு, இன்று தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget