மேலும் அறிய

TN Weather Update: இயல்பைவிட அதிகரிக்கும் வெயில்: அல்லல்படும் மக்கள் : வானிலை நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. அதன்படி, இன்று முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை :

09.03.2024 முதல் 11.03.2024 வரை: தமிழகத்தில்    ஓரிரு    இடங்களில்    அதிகபட்ச    வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக  இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 39.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் கரூர் மாவட்டத்தில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 33.5 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாத்தில் 34.5 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்னும் வெயில் காலம் அதிகாரப்பூர்வமாக தொடங்காத நிலையில் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பணிக்கு செல்லும் மக்கள், பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரித்து காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

12th Supplementary Exam: கவலை வேண்டாம், கல்லூரியில் சேரலாம்; பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
12th Supplementary Exam: கவலை வேண்டாம், கல்லூரியில் சேரலாம்; பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Sunil Chhetri Retirement: அதிர்ச்சி செய்தி! இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
அதிர்ச்சி செய்தி! இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
Mathew Thomas:  விபத்தில் சிக்கிய நடிகர் மேத்யூ தாமஸ் குடும்பம் - ரசிகர்கள் அதிர்ச்சி
விபத்தில் சிக்கிய நடிகர் மேத்யூ தாமஸ் குடும்பம் - ரசிகர்கள் அதிர்ச்சி
Coimbatore: சென்னை - கோவை சென்ற ஆம்னி பேருந்தில் இளம்பெண் மர்ம மரணம்!  என்ன நடந்தது?
Coimbatore: சென்னை - கோவை சென்ற ஆம்னி பேருந்தில் இளம்பெண் மர்ம மரணம்! என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Selvaperunthagai | ”பாஜக 100-ஐ தாண்டாது! மோடி கெஞ்சுகிறார்” விளாசிய செல்வப்பெருந்தகைRashmika about Modi | NTK Vignesh Mother | ”ஒத்த பைசா செலவு பண்ணல..சீமானுடன் விவாதிக்க தயார்”விக்னேஷ் தாயார் சவால்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
12th Supplementary Exam: கவலை வேண்டாம், கல்லூரியில் சேரலாம்; பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
12th Supplementary Exam: கவலை வேண்டாம், கல்லூரியில் சேரலாம்; பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Sunil Chhetri Retirement: அதிர்ச்சி செய்தி! இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
அதிர்ச்சி செய்தி! இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
Mathew Thomas:  விபத்தில் சிக்கிய நடிகர் மேத்யூ தாமஸ் குடும்பம் - ரசிகர்கள் அதிர்ச்சி
விபத்தில் சிக்கிய நடிகர் மேத்யூ தாமஸ் குடும்பம் - ரசிகர்கள் அதிர்ச்சி
Coimbatore: சென்னை - கோவை சென்ற ஆம்னி பேருந்தில் இளம்பெண் மர்ம மரணம்!  என்ன நடந்தது?
Coimbatore: சென்னை - கோவை சென்ற ஆம்னி பேருந்தில் இளம்பெண் மர்ம மரணம்! என்ன நடந்தது?
Heavy Rains: மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
Veerapandiya Kattabomman: கட்டபொம்மனாக ஒளிர்ந்த சிவாஜிகணேசன்... ”வீரபாண்டிய கட்டபொம்மன்” வெளியாகி 65 ஆண்டுகள் நிறைவு!
கட்டபொம்மனாக ஒளிர்ந்த சிவாஜிகணேசன்... ”வீரபாண்டிய கட்டபொம்மன்” வெளியாகி 65 ஆண்டுகள் நிறைவு!
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
Embed widget