மேலும் அறிய

கோவையில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடு - ஒரே நாளில் முடிவடைந்த ஒரு வார டோக்கன் விநியோகம்

கோவையில் நாள் ஒன்றுக்கு ரெம்டெசிவிர் 500 வயால் மட்டுமே வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்படும் நிலையில், இந்த ஒதுக்கீடு போதாது.

கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை, கோவையில் கடந்த  8 ம் தேதி துவங்கியது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 3 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வயால் ரெம்டெசிவிர் ஆயிரத்து 568 ரூபாய்க்கும், 6 வயால் ரெம்டெசிவிர் 9 ஆயிரத்து 704 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்று, சிடி ஸ்கேன் சான்று, மருத்துவரின் பரிந்துரை கடிதம், நோயாளி மற்றும் மருந்து வாங்க வருபவரின் ஆதார் நகல் ஆகிய ஆவணங்களுடன் வருபவர்களுக்கு மட்டுமே மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. ரெம்டெசிவிர் விற்பனை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக்குழுவினர் ஆவணங்களை பார்த்து பரிந்துரைப்பவர்களுக்கு மட்டுமே அம்மருந்து வழங்கப்படுகிறது.

ரெம்டெசிவிர் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. விற்பனை துவங்கிய முதல் நாளில் 500 வயால் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டது.  ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டு இருந்தாலும், மருந்து வாங்க வந்த 63 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. காலை 10 மணிக்கு மருந்து விநியோகம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதிகாலை 6 மணிக்கே டோக்கன் பெற்றவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மருந்து வாங்க குவிந்தனர். நேரம் ஆக ஆக மக்கள் கூட்டம் அதிகரித்தது. 500 க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்து வாங்கிச் சென்றனர். இதனிடையே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கை அடிப்படையில் மக்கள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நேரம் காத்திருந்தும் கல்லூரிக்குள் அனுமதிக்காததால் கல்லூரிக்கு முன்பாக காத்திருந்த பொதுமக்கள் கோவை அவிநாசி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து காவல் துறையினர் சமரசப்படுத்தி கலைந்து செல்ல செய்தனர்.


கோவையில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடு - ஒரே நாளில் முடிவடைந்த ஒரு வார டோக்கன் விநியோகம்

இந்நிலையில் நேற்று ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பு முடிவடைந்ததால், காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதில் வருகின்ற 15 ம் தேதி வரை ஒரு வாரத்திற்கான ரெம்டெசிவிர் டோக்கன் விநியோக்கப்பட்டுள்ளது. 16 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று மருந்து விற்பனைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இனி 17 ம் தேதி மருந்து வழங்கப்படும் எனவும், இதற்கான டோக்கன் 16 ம் தேதி கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு கோவை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு ஒட்டப்பட்டுள்ளது. டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் வழங்கப்படும் என்பதால், கல்லூரி முன்பு கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமென காவல் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். ஒரே நாளில் ஒரு வாரத்திற்கான டோக்கன் முடிவடைந்து இருப்பதால், அவசர தேவையாக மருந்து தேவைப்படுவோர் செய்வதறியாத நிலையில் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ரெம்டெசிவிர் வாங்க வந்த பொதுமக்கள் கூறுகையில், “கோவையில் நாள் ஒன்றுக்கு ரெம்டெசிவிர் 500 வயால் மட்டுமே வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்படும் நிலையில், இந்த ஒதுக்கீடு போதாது. சிலர் மருந்தை வாங்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்க வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க கூடுதல் மருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும். ரெம்டெசிவிர் விற்பனை மையங்களை அதிகரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
School Holiday: மாணவர்களுக்கு குஷியான நியூஸ்.! அக்டோபர் 22ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
School Holiday: மாணவர்களுக்கு குஷியான நியூஸ்.! அக்டோபர் 22ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
TN Weather News: இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை..மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை..மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
TN Weather News: இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
Embed widget