ராமதாஸ் பரபரப்பு! அன்புமணி குறித்த கேள்விக்கு பதில் இல்லை; பாமகவில் அதிகாரம் யாருக்கு?
"இனி அன்புமணி குறித்தான கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை" - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம்: பாமகவில் பொறுப்பு வழங்கவும், நீக்கவும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது, அன்புமணி குறித்தான கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது.,
அரசு பள்ளிகளில் ஆங்கில கல்வியை வளர்க்க லெவலாப் திட்டத்தை பாமக வரவேற்கிறது. 6 முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கான திட்டத்தை பாராட்டுகிறேன். அதே போல் ஒன்றாம் வகுப்பிலிருந்தது திட்டத்தை விரிவு படுத்த அரசு ஆலோசிக்க வேண்டும். உரம் தட்டுப்பாடு எனகூறி உரங்களை வாங்கி குடுவிப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டு. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் குருவை நெல் சாகுபதி காலம் என்பதால் ஐந்து லட்சம் சாகுபடி எதிர்ப்பார்க்கப்படுகிறது. உரம் தட்டுப்பாடு ஏற்படும் என தகவல் வந்துள்ளது. விவசாயிகள் உரங்களை மொத்தமாக வாங்கி குவித்து வருகிறன்றனர் இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
மழை காலம் தொடங்கவுள்ளது. சாலை மிக மோசனாக உள்ளது. சென்னை தான் மோசமான சாலையை கொண்டுள்ளது. மோசமான சாலை அமைப்பு காரணத்தினால் விபத்தில் முதலிடல் ஏற்படும் அபாயம் உள்ளது. மெட்ரோ, மேம்பால பணிகள் காலமாக நெடுஞ்சாலைகள் மோசமாக உள்ளது. மழை காலத்தில் சிக்கலான சூழலை பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டக்கூடாது. குண்டும் குழியுமான சாலையை தற்காலிகமாக சரி செய்யாமல் முழுமையாக அமைக்க வேண்டும். விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து இறந்தவர் என்னிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. கள்ளச்சாரம் குடித்து இறந்தால் கொடுக்கப்படும் இழப்பீட்டைவிட இது மிகக்குறைவுதான். பாதுக்காற்ற ஆலைகள் தான் அதிகமாக உள்ளது. அரசு விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.
ஆலை நிர்வாகத்திடம் இழப்பீடு கோரும் மக்கள் குரலை அரசு கேட்கவில்லை. அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும். நகை திருட்டு புகாரில் கொல்லப்பட்ட அஜித்குமார் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கள். அஜித்குமார் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். அரசு பணி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. புகார் அளித்த பெண்மணி மீது மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது என கூறுகிறார்கள். அஜித்குமார் கொல்லப்பட்ட விவகரம் ஊருக்கே தெரிந்த பிறகு தான் மாவட்ட கண்காணிப்பாளருக்கு தெரிவித்துள்ளது என்றால் சட்டம் ஒழுங்கு என்ன நிலை என்பது கேள்குறியாகியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் அருள் அவரை நீக்கும் அதிகாரம் அவரிடம் இல்லை. அவரை நீக்க நிறுவனர் தலைவரான என்னால் தான் செய்ய முடியும். அருள் ஐந்து பேருக்கு கொரடா. ஜி.கே.மணி அவர்கள் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவர், அவர் மூலமாக சபாநாயகருக்கு சிபாரிசு செய்து நீக்கலாம். இதற்கு நன் அனுமதி கொடுக்க வேண்டும். அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு. 96ஆயிரம் கிராங்களுக்கு சென்று கட்சியை வளர்த்தேன். இந்தும்
மன வேதனையான சில செயல்கள், வரத்தான் செய்கின்றனர். ஆனால் அவற்றை புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து பயனிப்பேன். மாநில செயற்குழு, நிர்வாக குழு, பொதுக்குழு கூடி எந்த அணியோடு கூட்டணி என முடிவு செய்ய முடியும். தலைவராக இருந்து இன்னும் சிறப்பாக செயல்பட அந்த பொறுப்பை எதுட்டுக்கொண்டுள்ளேன். ஆகஸ்ட் பத்தாம் தேதி மகளிர் மாநாடு நடைபெறவுள்ளது. வரும் பத்தாம் தேதி நான் அங்கு செல்லவுள்ளேன். மற்ற கட்சிகளை சேர்ந்த மகளிரும் கலந்துக்கொள்ளலாம். 25 ஆண்டுகள் ஜிகே.மணி தலைவராக உள்ளார். அன்புமணி தொடர்பான கேள்விகளை தவிற்கவும். அதற்கு என்னிடம் பதில் இல்லை. இரயில் கட்டணங்களை உயர்த்தக்கூடாது. ஏழை எளிய மக்கள் அதில் தான் பயனிக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





















