பணமோசடி வழக்கு.. தேடும் காவல்துறை.. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ராஜேந்திர பாலாஜி
முன் ஜாமின் கோரி ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி, ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அவர் மீது புகார் செய்யப்பட்ட நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதை விசாரித்து வந்தனர்.
விசாரணையின் முடிவில் தற்போது அவர் மீது இரு புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயநல்லதம்பி என்பவர், கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜியிடம், பலருக்கு ஆவினில் வேலை வாங்கித் தருவதாக தன்னிடம் அவர் கூறியதாகவும், அதன் அடிப்படையில் பலரிடமிருந்து பணம் பெற்று ராஜேந்திரபாலாஜியிடம் கொடுத்ததாகவும், 'நான் பலரிடம் வாங்கி கொடுத்த 3 கோடி ரூபாயை ராஜேந்திர பாலாஜி திரும்பி தரவில்லை' என, விஜயநல்லதம்பி, விருதுநகர் போலீசில் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என ராஜேந்திர பாலாஜி முன் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு முன் ஜாமின் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனையடுத்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகிவிட்டார் எனவும் அவரை தனிப்படை கடல் பகுதியில் தேடிக்கொண்டிருப்பதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால் அவர் தலைமறைவாகவில்லை என அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான ஜெயக்குமார் தெரிவித்தார். இந்நிலையில், தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: ‛ராஜேந்திர பாலாஜி மீது கொலை முயற்சி வழக்கு’ போலீஸ் பதில்: கடும் நடவடிக்கைக்கு ஐகோர்ட் தடை!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு: முன்ஜாமின் கேட்டு ஐகோர்ட்டில் மனு!
‛என் மீது புகார் அளித்தால்...’ -சீறும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தடை - உச்சநீதிமன்றம்
வருமானத்தை விட 73% சொத்து சேர்த்த ராஜேந்திர பாலாஜி - லஞ்ச ஒழிப்புத்துறை
Before You Go
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















